இந்தியாவின் முதல் வழிகாட்டி (நேவிகேஷனல்) செயற்கைக்கோளை விண்வெளியில் நிறுவ இருக்கும் பிஎஸ்எல்வி-எக்ஸ்எல் ராக்கெட், இன்றிரவு வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் ‘‘ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஏ’’ என்ற புதிய செயற்கை கோளை உருவாக்கி உள்ளனர். இயற்கை பேரிடர் காலங்களில் கப்பல், விமான பயணங்களுக்கு இந்த செயற்கை கோள் மிகவும் உதவி புரியும். கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து விமானம் மற்றும் கப்பல்களை துல்லியமாக கண்காணிக்கும்.
இந்தியாவுக்குள்ளும், இந்திய எல்லைப் பகுதியில் இருந்து 1500 கி.மீ. சுற்றளவு தூரத்திற்கு இது கண்காணித்து துல்லியமான தகவல்களை வழங்கும். 44 மீட்டர் நீளமும், 320 டன் எடையும் கொண்ட இந்த ராக்கெட் நான்கு நிலைகளைக் கொண்டது.
1425 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோளின் ஆயுள் காலம் 10 ஆண்டுகள் ஆகும். இந்த செயற்கை கோளை விண்ணில் செலுத்துவதற்காக பி.எஸ்.எல்.வி. சி22 ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட் மூலம் செயற்கை கோள் ‘‘ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஏ’’ இன்று இரவு 11.41 மணி அளவில் சென்னையிலிருந்து 80 கிமீ தொலைவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவின் சத்தீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய ராக்கெட் ஒன்று நள்ளிரவில் விண்ணில் செலுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
‘‘ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஏ’’ செயற்கை கோள் சுமார் 15 நிமிடங்களில் விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து, இஸ்ரோ தலைவர் கே.ராதா கிருஷ்ணன் இஸ்ரோ ஊழியர்களுக்கு மகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்தார்.
10 வருட உத்திரவாதமுள்ள இந்த செயற்கைக்கோள், இரண்டு பயன்பாடுகளை அளிக்கும் விதமாகச் செயல்படும். பொதுமக்கள் உபயோகப்படுத்தக் கூடிய ஜிபிஎஸ் சேவையும், உயர்மட்ட அரசு அதிகாரிகளின் உபயோகத்திற்கான சங்கேத குறியீடுகளுடன் கூடிய சேவையும் இதன்மூலம் பெறப்படும்.

No comments:
Post a Comment