Pages

Wednesday, July 31, 2013

பள்ளிக்கல்வி இயக்குநர் மாற்றம், புதிய பள்ளிக்கல்வி இயக்குநராக திரு. இராமேஸ்வர முருகன் நியமித்து உத்தரவு

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கட்டுபாட்டிலுள்ள துறைகளின் இயக்குநர்கள் மாற்றி தமிழக அரசு உத்தரவு  பிறப்பித்துள்ளது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக திரு. இராமேஸ்வர முருகன் அவர்களும், திரு. தேவராஜன் அவர்கள் அரசுத் தேர்வுகள் துறை இயக்குனராகவும், தொடக்கக் கல்வித் துறை  இயக்குநராக திரு.இளங்கோவன் அவர்களையும், திரு.சங்கர் அவர்களை அனைவருக்கும்
இடைநிலைக் கல்வி திட்ட இயக்குனராகவும், திருமதி. வசுந்திரதேவி அவர்களை ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலராகவும், திரு.கண்ணப்பன் அவர்களை ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வியியல் துறை இயக்குனராகவும், திரு. பிச்சை அவர்களை மெட்ரிக் பள்ளி இயக்குனராகவும், திரு.தங்கமாரி அவர்களை ஆசிரியர் தகுதித் தேர்வு இயக்குனராகவும், திரு.அன்பழகன் அவர்களை பாடநூல் கழக இயக்குநராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.   

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.