Pages

Monday, July 15, 2013

ஒரு மாணவர் 5 மரங்களை நட வேண்டும்: விஞ்ஞானி சிவதாணுபிள்ளை

சுற்றுப்புற சூழலை பாதுகாத்து தணணீர் பெற ஒரு மாணவர் ஐந்து மரங்களை நட வேண்டும் என விஞ்ஞானி சிவதாணுபிள்ளை பேசினார்.


திண்டுக்கல் சவுந்திரராஜா வித்யாலயா பள்ளியின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியா அமைதியான முறையில் வளர்ந்து வருகிறது. ஏவுகணை குறித்து பல ஆண்டுகளுக்கு முன் ஆர்யப்பட்டர் எழுதியுள்ளார். பாஸ்கராச்சார்யார் புவிஈர்ப்பு விசை பற்றி 3,000 ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளார்.

ஆனால் 500 ஆண்டுகளுக்கு முன்பு நியூட்டன் கண்டுபிடித்ததை நாம் கூறிக் கொண்டுள்ளோம். இந்தியாவில் எந்த மூலையில் இருந்து ஏவினாலும் 5,000 கி.மீ., பாய்ந்து தாக்கும் அக்னி ஏவுகணை தயாரித்துள்ளோம். நமது சக்தியை வெளிநாடுகளுக்கு காட்டவே இந்த ஏவுகணை.உலகத்தில் ஒவ்வொரு பொருளும் அசைந்து கொண்டு இருக்கிறது.

நாமும் அசைந்து கொண்டு தான் இருக்கிறோம். உலக அசைவு நின்றுவிட்டால் உலகமே இல்லை. பிரச்னைகளை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும். தற்போது ஆறுகளில் தண்ணீர் இல்லை. மரங்களை வெட்டியது தான் இதற்கு காரணம்.

ஒரு மாணவர் ஐந்து மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதன் மூலம் தான், தண்ணீரை பெற முடியும். உன்னால் முடியும் என்றால் அது இந்தியாவால் முடியும் என்று அர்த்தம், இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.