Pages

Monday, July 15, 2013

தமிழக வெப்பநிலை 2100-ஆம் ஆண்டில் 145 டிகிரியாக இருக்கும்

பருவநிலை மாற்றம் காரணமாக தமிழக வெப்பநிலை 2100-ஆம் ஆண்டு முடிவில் 145 டிகிரி (ஃபாரன்ஹீட்) என்ற அளவை எட்டும் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக உத்தரகாண்டில் ஏற்பட்ட இயற்கைச் சீரழிவைப்போல் தமிழகத்திலும் ஏற்படும் அபாயம் உள்ளது என் றும் அவர்கள் எச்சரிக்கை விடுத் துள்ளனர்.

"உத்தரகாண்ட் பேரிடரும் இயற்கை சீரழிவும்' என்ற தலைப் பிலான கருத்தரங்கம் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பருவநிலை மாற்ற ஆராய்ச்சி மய்ய ஆராய்ச்சியாளர் ஏ. சலீம் கான் பேசியது:
பருவநிலை மாற்றப் பாதிப்பு எந்த அளவுக்கு இயற்கைச் சீரழி வை ஏற்படுத்தும் என்பதை உத் தரகாண்ட் உலகுக்கு உணர்த்தி யிருக்கிறது.
இதைத் தடுக்க முடியாது என்ற போதும், பருவ நிலை மாற்றப் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு தீவிர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
இந்த முயற்சியை தீவிரமாக எடுக்கத் தவறியதால், மழை எப்போது பெய்யும் என்பதே தெரியாமல் போயுள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் பருவ மழை வெகுவாக குறைந்து போ யுள்ள நிலையில், கடலோரப் பகுதிகளில் அபரிமிதமான மழை பெய்யும் நிலையும் உருவாகி யிருக்கிறது.
அய்பிசிசி (பருவநிலை மாற்றத் துக்கான சர்வதேச குழு) அறிக்கை யின்படி, 1990 முதல் 2090-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத் தில் கடல் மட்டம் 18 முதல் 59 செ.மீ. வரை உயரும் என தெரி விக்கப் பட்டுள்ளது.

கிழக்கு கடலோரப் பகுதியில் குறிப்பாக வங்காள விரிகுடா பகுதியிலும் இதே அளவில் கடல் மட்டம் உயர வாய்ப்பு உள்ளதா கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் பேரழிவைச் சந்திக்க நேரிடும்.
இதுபோல் வெப்பநிலையும் அதிகரிக்கும் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் வெப்பநிலை இந்த நூற்றாண்டின் இறுதியில் அதாவது 2100-ஆம் ஆண்டு இறுதியில் சராசரியாக 37.6 டிகிரி கூடுதலாக வாய்ப்பு உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன என்றார்.
தமிழகத்தில் கடந்த மே மாதம் அதிகபட்ச வெயில் அளவு (வேலூர்) 108 டிகிரியாக இருந்தது. எனவே, இந்தப் புள்ளி விவரத் தின்படி 2100-ஆம் ஆண்டில் அதிகபட்ச வெப்பநிலை 145 டிகிரியாக உயரும் அபாயம் உள்ளது.
இந்தப் பருவநிலை மாற்றங்கள் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற் படுத்தும். குறிப்பாக நாகப்பட் டினம் கடல் பகுதிகளில் பாரம் பரிய மீன் வகைகள் முழுமையாக அழிந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே, பருவநிலை மாற்றப் பாதிப்புகளை கட்டுப் படுத்த முறையான நடைமுறைகள் வகுக் கப்பட்டு, அதற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என கருத் தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.