Pages

Tuesday, July 2, 2013

1999 முதல் 2011 வரை 56 பள்ளிகள் மூடல் மாணவர் சேர்க்கை குறைவான பள்ளிகள் கணக்கெடுப்பு தீவிரம் - நாளிதழ் செய்தி

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 32 மேல்நிலைப்பள்ளி, 36 உயர்நிலைப்பள்ளி, 1 உருது உயர்நிலைப்பள்ளி, 1 தெலுங்கு உயர்நிலைப்பள்ளி, 92 நடுநிலைப்பள்ளி, 122 தொடக்கப்பள்ளி, 30 மழலையர் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் சுமார் 98 ஆயிரத்து 857 மாணவ,மாணவிகள் படிக்கின்றனர். 4041 ஆசிரியர்கள் உள்ளனர்.

இவற்றில் குறைந்த மாணவர்கள் உள்ள மாநகராட்சி பள்ளிகள் மூடப்பட்டு, அருகில் உள்ள பள்ளிகளுடன் சேர்க்கும் நிலைக்கு மாநகராட்சி தள்ளப்பட்டுள்ளது. இப்படி 1999 முதல் 2011ம் ஆண்டு வரை 56 பள்ளிகள் மூடப்பட்டு அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதேபோல், இந்த ஆண்டு 25க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்துள்ள பள்ளிகள் கணக்கிடப்பட்டு அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாற்றப்படும்போது மாணவ, மாணவிகள் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியது உள்ளது. தொலைவு அதிகரிப்பது மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் படிப்பை தொடர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. சில மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள்  சரிவர இல்லாததாலும் பெற்றோர் தனியார் பள்ளிகளை நாடுகின்றனர். இதுவும் மாணவர் சேர்க்கை குறைவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. எனவே, மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்த பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சி பட்ஜெட்டில் கோடி கணக்கில் கல்வித்துறைக்காக நிதி ஒதுக்கப்படுகிறது. 2012,2013ம் ஆண்டு மட்டும் மாநகராட்சி பட்ஜெட்டில் ஸீ 15 கோடி ஒதுக்கப்பட்டது. இதேபோல், இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஸீ 14.50 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதியை ஒழுங்காக அதிகாரிகள் பயன்படுத்துவது இல்லை என்றும், பல கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் அப்படியே திருப்பி அனுப்பப்படுவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த நிதியை ஒழுங்காக பயன்படுத்தினாலே தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாநகராட்சி பள்ளியின் தரத்தை உயர்த்த முடியும். ஆனால், இது போன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.