பீகாரில், பள்ளியில், மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள், 16 பேர் திடீரென இறந்தனர்; மேலும், 40க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சரண் மாவட்டம், தர்மாசதி கந்தாவான் கிராமத்தில் உள்ள, அரசு ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, நேற்று மதியம், அரிசி, பருப்பு வகைகள் மற்றும் சோயா பீன்ஸ் கலந்த, மதிய உணவு வழங்கப்பட்டது. இதைச் சாப்பிட்டதும், மாணவர்கள் அடுத்தடுத்து, வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.
அனைவரையும், பள்ளி ஆசிரியர்கள், உடனடியாக சாப்ரா நகர மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, 11 மாணவர்கள் பலியாயினர்; மற்ற 48 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிரிழந்த மாணவர்களின், குடும்பத்திற்கு, தலா, இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
அத்துடன், விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த கிராமம், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுவின் சாப்ரா லோக்சபா தொகுதிக்கு உட்பட்டது.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.