Pages

Tuesday, July 2, 2013

பாலிடெக்னிக் கல்லூரிகள் 10ம் தேதி திறப்பு

முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிந்து வரும், 10ம் தேதி, பாலிடெக்னிக் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.
 
தமிழகத்தில், 50 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளும், 450 சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிக்கேஷன்ஸ், வேதியியல், தோல், அச்சு, நெசவு உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட பாடங்களில், டிப்ளமோ, சான்றிதழ், முதுகலை டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இப்படிப்புகளுக்கான, முதலாமாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம், ஜூன், 5ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரை நடந்தது. மொத்தமுள்ள,1.50 லட்சம் இடங்களுக்கு, நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.

இதுகுறித்து, சென்னை, தரமணி டாக்டர் தர்மாம்பாள் அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சொர்ணகுமார் கூறியதாவது: முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தற்போது நடந்து வருகிறது. மாற்றுத்திறனாளி மாணவர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசு, விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு முடிவடைந்து உள்ளது.

பொது பிரிவினருக்கான கலந்தாய்வு, இன்று (2ம் தேதி) துவங்கி, 9ம் தேதி முடிவடைகிறது. இம்மாணவருக்கான வகுப்புகள், வரும், 10ம் தேதி துவங்குகிறது. இவ்வாறு, சொர்ணகுமார் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.