Pages

Saturday, June 1, 2013

புதுக்கோட்டையில் கவுன்சலிங் ஆசிரியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் - நாளிதழ் செய்தி

புதுக்கோட்டையில் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதலுக்கான கவுன்சிலிங்கின் போது காலிப்பணியிடம் மறைக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நேற்று(30ம் தேதி) இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றியத்துக்குள் பணியிட மாறுதல் வழங்குவதற்கான கவுன்சலிங் நடந்தது. மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் பலர் இதில் பங்கேற்றனர்.
கவுன்சலிங்கின் போது அந்தந்த ஒன்றியத்துக்குள் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் குறித்த பட்டியல் ஆசிரியர்களின் பார்வைக்க வைப்பது வழக்கம்.
அன்னவாசல் ஒன்றியத்துக்குள் காலிப்பணியிடம் குறித்த பட்டியலில் கல்லம்பட்டி தொடிக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் பணியிடம் காட்டாமல் மறைக்கட்பட்டிருந்தது. இந்த பணியிடத்தை எதிர்பார்த்து காத்திருந்த ஆசிரியர்கள் இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மாரிமுத்து மற்றும் பார்வையாளர் ராமானுஜம் ஆகியோரை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டுள்ளனர்.
கல்லம்பட்டி தொடக்கப்பள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடம் என்பது முடிந்துபோன விஷயம். அதைப்பற்றி இங்கு விளக்கமளிக்க முடியாது என கூறியுள்ளனர். இடைநிலை ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கவுன்சலிங் ஆரம்பித்து அரைமணி நேரம் கூட முடிவடையாத நிலையில் கல்லம்பட்டி தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணியிடம் எப்படி முடிந்துபோன விஷயமாகும் என ஆசிரியர்கள் மறுகேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளிக்காமல் ஆசிரியர்களை சமாளிப்பதற்கான முயற்சிகளை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மாரிமுத்து துவக்கினார். ஆத்திரமடைந்த இடைநிலை ஆசிரியர்கள், பணியிட மாறுதல் விஷயத்தில் கல்வித்துறை அதிகாரிகளின் தலையீடு மற்றும் தில்லாலங்கடி நடவடிக்கைகளை கண்டித்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆதரவுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரண்டுமணி நேரம் வரை கவுன்சிலிங் நிகழ்ச்சி ரத்தானது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.