மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு, கவுன்சிலர்கள் முன்னிலையில் நடந்ததும், பங்கேற்ற ஆசிரியர்கள், அவர்கள் முன் பணிந்து, குனிந்து பதிலளித்ததும், வேதனையான விஷயம்.
மாநகராட்சி பள்ளிகளின், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் மற்றும் பணிஉயர்வுக்கான கலந்தாய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.
வழக்கமாக, மேயர் துவக்கி வைத்த பின், அதிகாரிகள் முன்னிலையில் நடக்கும் கலந்தாய்வு, நேற்று வேறு விதமாக நடந்தது. கூட்ட அரங்கில், கலந்தாய்வை துவக்க வந்த மேயர் ராஜன் செல்லப்பாவுடன், ஐந்து கவுன்சிலர்களும் கலந்தாய்வில் பங்கேற்றனர்.
மேயருடன் அமர்ந்திருந்த அவர்கள் முன், பணிந்து, குனிந்து, நின்றபடி ஆசிரியர்கள் பதிலளித்ததும்; நாற்காலியில் அமர்ந்து, கவுன்சிலர்கள் அதனை வேடிக்கை பார்த்ததும், பார்க்க பரிதாபமாக இருந்தது.
அதே வரிசையில், கமிஷனர் நந்தகோபால், மேயர் ராஜன் செல்லப்பா, மாநகராட்சி கல்வி அலுவலர் மதியழகுராஜா அமர்ந்திருந்ததால், அவர்களுக்கு மரியாதை தர வேண்டிய காரணத்தால், ஆசிரியர்களும் பணிவாய் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதுபோன்ற கலந்தாய்வில், கல்விப்பிரிவு தொடர்பானவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். மாறாக, மற்ற கவுன்சிலர்கள் எதற்கு பங்கேற்க வேண்டும்?

ஆசிரியர்கள் மாநகராட்சி ஊழியர்கள் அல்ல; அரசு ஊழியர்கள் . ஐந்து ஆண்டுகள் சுயநலத்தோடு வாழும் ஆட்சியாளர்களைவிட முப்பது ஆண்டுகள் மாணவர்கள் நலனுக்காக வாழும் ஆசிரியர்கள் மேலானவர்கள்...
ReplyDelete....... கவுன்சிலிங் கூட்டம் என்பதனை
ReplyDeleteகவுன்சிலர்கள் கூட்டம் என
நினைத்து வந்தவர்களோ.......