Pages

Thursday, June 20, 2013

டி.இ.டி., விண்ணப்பங்களை வழங்கும் பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது - டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் கே. சவுத்ரி

டி.இ.டி., விண்ணப்பங்களை, தனியார் பள்ளிகளில் வழங்காதது ஏன் என்பது குறித்து, டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் கே. சவுத்ரி கூறியதாவது:அரசு பள்ளிகள் தான், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. தனியார்பள்ளிகளிடம் வேலை வாங்க முடியாது. அரசுப் பள்ளிகள், நம்பகத் தன்மைக்கு உரியவை. அவர்களை நம்பி, வேலையை ஒப்படைக்கலாம்.
வேலையில் ஏதாவது பிரச்னை நடந்தால், சம்பந்தபட்டவர்கள் மீது, நடவடிக்கையும் எடுக்கலாம். இதுபோன்ற நடவடிக்கைகளை, தனியார் பள்ளிகள் மீது எடுக்க முடியாது. அதனால் தான், அரசு பள்ளிகளில், டி.இ.டி., விண்ணப்பங்களை வழங்குகிறோம். விண்ணப்பம் வழங்கும் பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது என, தெளிவாக கூறியுள்ளோம். "கிளார்க்'குளை மட்டுமே, இந்த பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனவும், தெரிவித்துள்ளோம்.இவ்வாறு சுர்ஜித் கே. சவுத்ரி கூறினார்.

1 comment:

  1. கிளார்க் இல்லாத பள்ளிகளில் யார் கொடுப்பது

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.