Pages

Monday, June 3, 2013

ஆங்கில ஆய்வகம் திட்டம்.... மாதிரி பள்ளிகளுடன் முடக்கம்

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்கும் பொருட்டு, துவங்கப்பட்ட ஆங்கில ஆய்வகம் திட்டம், கிடப்பில் போடப்பட்டதால், கிராமப்புற மாணவர்களின் வாசிப்பு திறனில், தொய்வு ஏற்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், ஆங்கில ஆய்வகம் திட்டம் துவங்கப்பட்டது. ஒரு மாவட்டத்தில் முதல் கட்டமாக ஐந்து உயர்நிலை, ஐந்து மேல்நிலைப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்பு, பேச்சுத்திறனை வளர்ப்பது குறித்து, நடைமுறை செயல்விளக்கம் அளிக்கும் வகையில், ஆங்கில ஆய்வகம் என்ற பெயரில் திட்டம் துவங்கியது.

இதற்காக ஒரு பள்ளிக்கு 10 முதல் 20 மாணவர்கள், ஒரு அறையில் பங்கேற்கும் வகையில், ஒவ்வொரு மாணவருக்கும் ஹெட்போன், மைக், வழங்கப்பட்டது. இவை, ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது. ஆங்கிலத்தில் உரையாடுவது குறித்து பதிவு செய்யப்பட்ட கேசட் மூலம், ஒவ்வொரு மாணவர் ஹெட்போனிலும் ஒலிபரப்பப்படும்.

இதில் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை, மைக்கில் கேட்டால், ஆசிரியர் உரிய விளக்கமளிப்பார். மேலும் உச்சரிப்பு, பேசுவது குறித்து ஆசிரியர் மைக்கில் விளக்கும்போது, அனைத்து மாணவர்களின் ஹெட்போனில் கேட்கும். ஆனால், மாணவர்களின் கேள்விகள், ஆசிரியருக்கு மட்டும் கேட்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

முதல் கட்டமாக மாதிரி பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஆனால் மாதிரி பள்ளிகளுக்கு வழங்கிய உபகரணங்களே, இதுவரை சரியாக பயன்படுத்தப்படவில்லை. மற்றப்பள்ளிகளில் திட்டம் துவங்கப்படவே இல்லை.

இதனால், கிராமப்புற மாணவர்களின், ஆங்கில உச்சரிப்பு மேம்பாடு கேள்வி குறியாகி விட்டது. இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ஆங்கில ஆய்வகம் திட்டம், கிராமப்புற மாணவர்களுக்கு பயன்தரும் வகையில் இருந்தது. ஆனால், முதல் கட்ட பயிற்சியுடன், நிறுத்திவிட்டனர்.

தொடந்து செயல்படுவது குறித்து, தெளிவுபடுத்தவில்லை. மேலும், சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், ஈடுபாடு காட்டாததால், தற்போது இத்திட்டத்திற்கான, உபகரணங்கள் பயன்பாடின்றி உள்ளது, என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.