Pages

Sunday, June 2, 2013

முதுகலை ஆசிரியர் தேர்வு: 82 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, நேற்றுடன், 82 ஆயிரம் விண்ணப்பங்கள், விற்பனை ஆகியுள்ளன. விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், வரும், 14ம் தேதி, கடைசி நாள்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 21ல், போட்டித் தேர்வு நடக்கிறது. இதற்காக, 3 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும், நேற்று முன்தினம் முதல், விண்ணப்பம் வினியோகம் துவங்கியது.

முதல் நாளன்று, 68 ஆயிரம் விண்ணப்பங்கள், விற்பனை ஆயின. அதிகபட்சமாக, சேலம் மாவட்டத்தில், 3,500 விண்ணப்பங்கள், விற்பனை ஆயின. நேற்று, மாநிலம் முழுவதும், 14 ஆயிரம் விண்ணப்பங்களும், விற்பனை ஆயின. 1.5 லட்சம் பேர் வரை, விண்ணப்பிக்கலாம் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது.

1 comment:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.