மாசுபட்ட உணவு உட்கொண்ட எல்லோருக்கும் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது. அதிலும் சில நேரங்களில் உண்ணும் உணவை உற்பத்தி செய்யும் பொழுது அல்லது செயலாக்கத்தின் பொழுது உணவானது தூய்மைக்கேடு அடைகிறது.
இதனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உணவு நஞ்சாகிவிடுகிறது.
மேலும் சிலருக்கு அரைகுறையாக சமைத்த, முறையாக சமைக்காத உணவினால் அல்லது உணவு பொருட்கள் போதுமான முறையில் சமைக்கப்படாததால் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது. இன்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஃபுட் பாய்சன் நடைபெறுவதற்கு காரணங்கள், முறையற்ற விதத்தில் உணவைத் தயாரிப்பது, சேமிப்பது மற்றும் சமைப்பதாகும். எனவே, உணவை சரியான முறையில் எவ்வாறு தயார் செய்வது, சமைப்பது மற்றும் சேமிப்பது என்பதை புரிந்து கொண்டால், ஃபுட் பாய்சன் என்னும் ஆபத்தை குறைக்க முடியும். இப்போது ஃபுட் பாய்சனை தடுக்க உதவும் சில சிறந்த வழிகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பின்பற்றி ஃபுட் பாய்சனிலிருந்து விடைபெறுங்கள். கைகளை சுத்தமாக வைக்கவும் எப்பொழுதும் உணவு தயாரிக்கும் முன்பு, வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சோப்பை கொண்டு கைகளை கழுவ வேண்டும். சுத்தமான சமையலறை சமைக்கும் சமையலறை மற்றும் அதன் பாத்திரங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பாக்டீரியாக்கள் பரவாமல் பாதுகாக்கவும் சமைக்கப்படாத மற்றும் சமைத்த உணவிற்கு என்று தனித்தனி வெட்டும் பலகைகளைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் சமைக்கப்படாத உணவில் இருக்கும் பாக்டீரியாக்கள், சமைத்த உணவுப் பொருளைத் தாக்கி, பாக்டீரியாவை பரவச் செய்யும். எனவே இதில் அதிகம் கவனம் தேவை. சுத்தமான காய்கறி மற்றும் பழங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன்போ அல்லது அவற்றைக் கொண்டு வேறு ஏதாவது தயாரிப்பதற்கு முன்போ தண்ணீரில் கழுவ வேண்டும். உறைந்த பொருள்களை தவிக்கவும் சமைப்பதற்கு முன்பு உணவுப் பொருளை ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், அவற்றின் உறை நிலையை முழுமையாக குறைக்க வேண்டும். செல்லப்பிராணிகள் உண்ணும் உணவை செல்லப்பிராணிகளிடமிருந்து சற்று விலக்கியே வைத்திருக்க வேண்டும். நன்கு சமைத்த உணவு உணவுகள் முற்றிலும் சமைக்கப்பட்டதா? என்பதை உறுதி செய்த பின்னர், உணவை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். உணவில் கவனம் தேவை சமைத்த உணவிற்கும், சமைக்கப்படாத உணவிற்கும் இடையில் தொடர்பை தவிர்க்கவும். அதாவது பச்சை இறைச்சி, கோழி மற்றும் மீனை குளிர்சாதன பெட்டியின் கீழ் பகுதியிலும், சமைத்த உணவை மேல் பகுதியிலும் வைக்கவும். சரியாக பராமரிக்கவும் உணவுப் பொருள் விரைவில் கெட்டுப் போகின்றதாக இருந்தால், அவற்றை 5°C அல்லது அதற்கும் குறைவான வெப்பநிலையில் வைத்து பராமரிக்க வேண்டும். சுத்தமான இடத்தில் உணவுகளை வைக்கவும் பெட்டியில் அடைத்த உணவுப் பொருட்களை சுத்தமான அல்லது குளிர்ந்த இடத்தில் வைக்கவும். துர்நாற்ற உணவுகளை தவிர்க்கவும் உணவில் துர்நாற்றம் அல்லது பூஞ்சை இருந்தால், அந்த உணவை அறவே தவிர்க்க வேண்டும். உற்பத்தி தேதி பார்க்கவும் எப்பொழுதும் உணவு பொருளை வாங்குவதற்கு முன்பும், அதன் உற்பத்தி தேதியை சரிபார்க்கவும்.
1 comment:
Superb.....
Post a Comment