Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, May 10, 2013

    ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த சில ஐயங்களும், TNPTF மாநில பொது செயலாளரின் விளக்கமும்

    1. இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு உண்டா?
            இரட்டை பட்டம் பதவியுயர்விற்கு தகுதி சார்ந்து வழக்கு உயர்நீதி மன்றத்தில் விசாரணையில் உள்ளதாலும், அதன் விசாரணை ஜுன் 10ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாலும், அதுவரை பதவியுயர்வு நடத்த மாட்டோம் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளதால், தற்போதைய அட்டவணையில் இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு இல்லை. வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு பின்பே இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வர வாய்ப்பு இருக்கிறது.

    2. சென்ற ஆண்டு பயன்படுத்திய மாறுதல் விண்ணப்பப் படிவத்தையே இந்த ஆண்டும் பயன்படுத்தலாமா?

                   இன்றோ, நாளைக்குள்ளோ இயக்குனரகம், கலந்தாய்வு விதிமுறைகள் குறித்த முழுமையான செயல்முறையையும் படிவத்தையும் வெளியிடும். அதுவரை காத்திருந்து அதை பின்பற்றுவதே சரியாக இருக்கும்.

    3. இந்த வருட கலந்தாய்வு இணைய (ONLINE) வழியில் நடைபெற வாய்ப்புண்டா?

               பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வித் துறையின் கலந்தாய்வு தேதிகள் ஒரே தேதியில் இல்லாமல் வெவ்வேறு தேதிகளில் நடைபெறுவதால், இணையவழியில் நடைபெற நிறைய வாய்ப்புள்ளது.

    2 comments:

    Anonymous said...

    when counselling will be announced for this year? please tell me

    Unknown said...

    i am tet appointed teacher may i attend this transfer counselling?