வணக்கம், மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களால் அரசாணைப் பிறப்பிக்கப்பட்டு (அரசாணை (நிலை) எண் 177
பள்ளிக்கல்வித்(சி2) துறை நாள் 11.11.2011) S.S.A மூலம் இடைநிலை
வகுப்புகளுக்கு உடற்கல்வி, கணினி, ஓவியம், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, ஆங்கிலப்பேச்சு போன்ற பாடங்களில் மாணவர்களின் கல்வியை ஊக்குவித்திட
தமிழகம் முழுவதும்
முற்றிலும் தற்காலிகமான ஒப்பந்த அடிப்படையிலான பகுதி நேர பணியாக
16549 பகுதிநேர பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டு, தொகுப்பூதியம் ரூ.5000 எனவும், வாரம் 3
அரைநாட்கள் - மாதம் 12 அரைநாட்கள் என்ற ரீதியில் வருகைப்பதிவேட்டில் கையொப்பமிட
அனுமதிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றோம். பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப கூடுதல்
நேரமும்-நாட்களும், முழு அற்பணிப்போடும் - ஒத்துழைப்போடும், முயற்சியும்-உழைப்பும் வீணாகாது என்ற
எதிர்பார்ப்பில் பணிபுரிந்து வருகின்றோம். பணியமர்த்த்ப்பட்ட மார்ச் 2012 முதல்
இதுவரை தொகுப்பூதியம் ரூ.5000 அனைவருக்கும் முழுவதும் கிடைக்கிறதா?, எத்தனை
நாட்களில் கிடைக்கிறது?, கிராம கல்விக்குழுவின் (VEC) மூலம் ஊதியம் வழங்கப்படுவதில் எந்த
வகையில் பாதிக்கப்படுகிறீர்கள்?, ஊதியம் பெறும் வேலைகளில் சம்மந்தப்பட்ட பகுதிநேர
ஆசிரியர்களே செய்கிறார்களா? என்பதை ஆய்வு செய்வதோடு மட்டுமின்றி, அரசின் திட்டங்கள் பயனாளிகளின் வங்கிக்கணக்கில்
செலுத்தப்படுவதைப்போல, பள்ளி மாணவர்களுக்கு அரசின் உதவித்தொகைகள்-ஊக்கத்தொகைகள்
மாணவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுவதைப்போல, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் என்பதை கருத்தில் கொண்டு அவரவர்
வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டால் காலதாமதமும் வீண் அலைச்சலும் இருக்காது. அரசாணையின்
பத்தி 2.7இன்படி வேலைக்கு வராமால் விடுப்பு எடுத்திருந்த நாட்களுக்கு ஊதியத்தினை பிடித்து ஊதியம்
கிராமக்கல்விக்குழுவால் பகுதி நேர பயிற்றுநர்களுக்கு வழங்கப்படும் என்றுள்ளது. (Salaries will be paid to the Part time
Instructors through Village Education Committee (VEC) proportionally after deducting
the salaries for the days to which he/she is absent from duty. Proper
attendance register should be maintained in the school.). அரசாணையின் பத்தி 2.3இன்படி, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்று
கிழமை தவிர பணிபுரியும் காலம் வரை வேறெதுவும் விடுமுறை கிடையாது என்றுள்ளது. (Except Gazetted Holidays and Sundays no Leave is Eligible during Period of Services for Candidate Appointed as Part-time Instructors) அரசாணையின் பத்தி 2.6-இன்படி, தேர்வு
நேரங்களில் பள்ளிக்கு வருவதிலிருந்து பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு விலக்கு
அளிக்கப்படலாம். ஆனால் அதற்குப் பதிலாகப் பள்ளிக்கு வராத நாட்களை ஈடுசெய்யும்
விதமாகக் காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு பருவ விடுமுறை நாட்களில்
பள்ளிக்கு வந்து குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என
ஆணையிடப்பட்டுள்ளது.(The
incumbents selected may be exempted from attending School during examination
and should be asked to compensate by attending the school instead on Holidays
i.e., Quarterly, Half Yearly and Annual summer vacation to train the children) இதுபோன்று அரசாணையில் தெளிவாக குறிப்பிட்டிருக்கும் போது மாநில திட்ட
இயக்குநர், அனைவருக்கும் கல்வி இயக்கம், சென்னை அவர்களின்
ந.க.எண்.1115/அ5/அகஇ/2011, நாள்.30.04.2012 கையொப்பமிட்டிராத இமெயில் உத்தரவில்
அரசாணை பத்தி 2.6க்கு வேலைக்கு வராத, பள்ளி நடைபெறாத நாட்களுக்கு ஊதியம் கிடையாது
என தெரிவிக்கலாகிறது என்று பகுதி நேர ஆசிரியர்களை பாதிக்கும் வகையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மாநில திட்ட இயக்குநர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) மூலம் அனைத்து மாவட்டங்களின்
முதன்னைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டு
அதன் தொடர்ச்சியாக அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மூலம் அனைத்து
தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும் கடலூர் மாவட்ட கூடுதல்
முதன்மை கல்வி அலுவலர்(அனைவருக்கும் கல்வி இயக்கம்) அவர்களின் செயல்முறைகள்
ந.க.எண்.2325/அ1/அகஇ/2012 நாள்.16.11.2012ல் பள்ளிகள் தொடர்ச்சியாக விடுமுறையில்
இருக்கும்போது பகுதி நேர ஆசிரியர்கள் குறிப்பிட்ட வார வேலை நாட்களில் வேலை செய்து
12 நாட்களாக கணக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றும், பள்ளித்தலைமையாசிரியர்களே பகுதி
நேர ஆசிரியர்களின் ஊதியப்பட்டியலை உரிய நேரத்தில் வட்டார வள மைய
மேற்பார்வையாளருக்கு அனுப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற
நிலையில் ஏப்ரல் 2013 மாதத்தில்
பள்ளிகளில் ஆசிரியர்கள் தேர்வுப்பணிகளுக்கு சென்றுவிட்டதால் பகுதி நேர ஆசிரியர்களை
பயன்படுத்தி பள்ளிகளை நடத்துங்கள் என்று கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
மூலம் வாய்மொழி உத்தரவு வந்ததாக சொல்லி பெரும்பாலான பள்ளித் தலைமையாசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர்களை அனைத்து நாட்களும் பணிபுரிய கேட்டுக்கொண்டதால் அனைவரும் வருகை
புரிந்து பணியாற்றி இருந்தும், ஏப்ரல் 2013க்கு நடுநிலைப்பள்ளிகளை தவிர உள்ள
மேனிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட வேலைநாட்களாக 9
நாட்களுக்கு மட்டுமே ஊதியம் தரமுடியும் என்று ஊதியப்பிடித்தம் செய்யப்பட்டிருக்கிறது.
இதே அரசாணையைப் பின்பற்றிய விழுப்புரம், திருச்சி, மதுரை, திருப்பூர், உள்ளிட்ட
மாவட்டங்களில் ரூ.5000 முழுத் தொகுப்பூதியம் வழங்கப்பட்டுள்ளது. ஆதலால்
எங்களுக்கும் ரூ.5000 முழுத் தொகுப்பூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். தமிழகம்
முழுவதுமுள்ள ஏனைய மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களைப் போலவே, கடலூர் மாவட்ட
முதன்மை கல்வி அலுவலகம் மூலம் வாய்மொழி உத்தரவிட்டு ஏப்ரல் 2013ல் பள்ளி நடைபெறாத
விடுமுறைநாட்களுக்கு ஊதியம் கிடையாது என்றதால், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைவரும்
கடலூர் C.E.O
அலுவலகத்தில் 15.4.2013ல் ஒன்றுகூடி மாண்புமிகு
முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவித்தும்,
ஏப்ரல் 2013க்கு ரூ.5000 முழுமையாக வேண்டும் என்றும், மேலும் மே 2012க்கு
வழங்கப்படாத ரூ.5000 தொகுப்பூதியத்தை திரும்ப வழங்கிடவும், செப்டம்பர் 2012,
அக்டோபர் 2012ல் தினக்கூலி அடிப்படையில் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தினை அந்தந்த
வட்டார வள மையக்கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிகளுக்கு திரும்ப வழங்க கோரியும், கடலூர் மாவட்ட C.E.O மற்றும் SSA-C.E.O
அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 2.5.2013ல் சிவகங்கை மற்றும் 6.5.2013ல் திருச்சி C.E.O
அலுவலகத்தில் அந்தந்த மாவட்ட அளவில் ஊதியப்பிடித்தம்,
பணி சம்பந்தமான கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அரசின் கவனத்தை ஈர்த்திடும்
வகையில் தினசரி நாளிதழ்களில் கோரிக்கைகளை தொடர்ந்து அனுப்பி வருகிறோம். மாண்புமிகு
கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும்
கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அரசாணையில் ஒருவர் அதிகபட்சமாக நான்கு
பள்ளிகளில் பணிபுரியலாம் என்றுள்ள வாய்ப்பினை அரசால் நியமிக்கப்பட்ட எங்களுக்கு கூடுதல்
பள்ளிகளில் பணிபுரிய வாய்ப்புகளை வழங்குங்கள் என்று கோரியதற்கு, அதிகமானோர்
விண்ணப்பித்திருப்பதாகவும், திட்டத்திற்கு போதுமான நிதி இல்லாதாதாலும் எங்களின் கோரிக்கை
மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போது தமிழகம் முழுவதும காலிப்பணியிடங்களுக்கு
புதிதாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு நியமனங்கள் நடைபெறவுள்ளது. இதில் குறைந்தபட்சம்
எங்களுக்கு அருகிலுள்ள பள்ளிகளிலாவது மனமொத்த மாறுதல் வழங்கினால் தினமும் 30 கி.மீ
முதல் 100 கி.மீ வரை பயணித்து பேருந்து கட்டணமாக ஒரு பகுதி செலவிடுகின்ற நிதிச்சுமை
தாக்காமல் இருக்கும் எனறு வேண்டுகிறோம். சென்னை எழும்பூர் ராஜரத்தினம்பிள்ளை
அரங்கில் 9.5.2013ல் காவல்துறையின் அனுமதியைப் பெற்று 16549 பகுதி நேர
ஆசிரியர்களுக்கு பணி வழங்கிய மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி
அறிவிப்பு பேரணி மாலை 3 மணியளவில் நடத்தி,
அன்றைய தினமே முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலரிடம் முழு நேரப்பணி, காலமுறை ஊதியம்,
பணி நிரந்தரம், பணி மாறுதல், வங்கிக்கணக்கின் மூலம் ஊதியம்,
ஊதியப்பிடித்தம்-ஊதியக்குளறுபடிகள், வாய்மொழி உத்தரவை தவிர்த்து-துறை ரீதியான
அறிக்கை, மகப்பேறு கால விடுப்பு உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை அளித்துள்ளோம். மேலும்
10.5.2013ல் சட்டமன்றத்தில் கல்வி மானிய கோரிக்கையில் மாண்புமிகு சட்டமன்ற
உறுப்பினர் குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்) மற்றும் மாண்புமிகு சட்டமன்ற
உறுப்பினர் ஜான் ஜேக்கப் (காங்கிரஸ்) ஆகியோர்கள் அவையில் மாண்புமிகு முதல்வர்
அம்மா அவர்களின் கவனத்தை ஈர்த்திடும் வகையில்
16549 பகுதிநேர ஆசிரியர்களுக்காக பகுதிநேர பணியை முழு நேர பணியாக்க வேண்டும
என்றும், ஊதிய உயர்வு வேண்டும என்றும் குரல் கொடுத்துள்ளனர். இந்த 16549 பகுதிநேர
ஆசிரியர்களின் குடும்பங்களும் மாண்புமிகு முதல்வர் அம்மா தலைமையிலான அரசையும்,
அரசியல் முடிவுகளையும் என்றென்றும் நன்றி விசுவாசத்துடன் ஆதரிப்போம் என்ற உறுதியை
கூறி, அரசையே நம்பி வாழும் எங்களுக்கு, மக்களுக்காக அரசு என்ற தங்களின் உயரிய கொள்கைப்படி
தினமும் அவையில் 110ன்கீழ் அறிவிப்பதில், 16549 பகுதிநேர ஆசிரியர்களுக்குமான
நல்லதொரு அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
இந்த மிகப்பெரிய கட்டுரை காலத்தின் கட்டாயமாகக் காரணம்.
ReplyDelete1. சிறப்பாசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக நியமிக்காதது.
2. வேலைவாய்ப்பக பதிவு மூப்பு முன்னுரிமையில் முழுநேர சிறப்பாசிரியர்களை ( முழு ஊதிய ஆசிரியர்கள் ) அரசு சில பள்ளிகளில் மட்டுமே நியமித்து வருவது.
3. அனைத்து சிறப்பாசிரியர்களையும் சமமாக கருதாத தன்மை
4.பகுதிநேர ஆசிரியர்களுக்கான, கால அட்டவணை பல பள்ளிகளில் வழங்காமலேயே வேலை பார்க்கச் சொல்வது.
5. விலைவாசி உயர்வின் பாதிப்பு பகுதிநேர ஆசிரியர்களுக்கு இருக்காது என எண்ணுவது.
6. பணிநிரந்தரம், பணிமாறுதல் ஆகியன மறுக்கப்படுவது.
7.விழிப்புணர்வற்ற பகுதிநேர ஆசிரியர்கள்
In the G.O. No. 177, some of the modifications are needed. There are
ReplyDelete1. The salary of the Part-time instructors will be Rs.5000 per month without any deduction. ( Consolidate salary )
2.Salaries will be paid to the Part Time Instructors through Dist. Treasury.
3. The services of the selected Part-Time Instructors must be regularised.
4. Syllabus for the special subjects will be published.
when they will give the permanent job for us?
ReplyDeletei am awaiting for CM Positive Reply
ReplyDelete???
Deletei am looking forward for CM Positive reply before this monthend
ReplyDeleteplease, give the permanent job for part-time teachers.we are awaiting for CM order.
ReplyDeleteRespected CM,
ReplyDeletePlz do Favor for part time teachers to convert them full time teacher
ஐயா, வணக்கம். தங்களின் நீண்ட கடிதம் பகுதிநேர ஆசிரியர்களின் மனக்குறையையும், பிரச்சனைகளையும், தெள்ளத்தெளிவாக காட்டியுள்ளது. தமிழக முதல்வர் அம்மா அவர்கள் தான் நியமனம் செய்யப்பட்டார்கள்.
ReplyDeleteதற்போது உள்ள நிலையில் பகுதி நேர ஆசிரியர்களின் நிலையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல தங்களின் முயற்சி பாராட்டத்தக்கது. மேலும், முதல்வரின் கருணை பார்வை கிடைக்கும் என்ற பெரும் நம்பிக்கையும் உண்டு. வாழ்த்துக்கள்....
How to run the family by using 5000 then who will give job for other 3 days
ReplyDeleteRespected CM Please do any changes