Pages

Wednesday, May 15, 2013

புத்தகங்களையும், நூலகத்தையும் பாதுகாக்க அமைச்சர் வலியுறுத்தல்

"மனிதர்கள் அறிவை பெற அடித்தளம் அமைக்கும் புத்தகங்களையும், நூலகத்தையும் அழியாமல் பாதுகாக்க வேண்டும்," என, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.
தஞ்சை மாவட்ட நூலகத்தில் உலக புத்தக தினவிழா நடந்தது. இதில், கலெக்டர் பாஸ்கரன் தலைமை வகித்தார். இதில், கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் பரிசு வழங்கி பேசியதாவது:

கல்வி மற்றும் நூலகத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதிக நிதி ஒதுக்கீடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் நோக்கம், ஒரு நாடு வளம்பெற வேண்டுமானால் அங்குள்ள நாட்டு மக்கள் கல்வியோடு இணைந்த அறிவு பெற வேண்டும்.

இத்தகைய அறிவை பெற அடித்தளமாக நூல்கள் அமைந்துள்ளன. அதனால், நூலகங்களை பேணி பாதுகாக்க வேண்டியது நமது கடமை. நூலகங்களை பயன்படுத்தி மாணவர்கள் கல்வியில் எழுச்சி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து கலெக்டர் பாஸ்கரன் பேசுகையில், "மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். புத்தகங்களை குறித்த சிந்தனைகளை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துரைக்க வேண்டும் என்னும் முயற்சியில், அரசு ஆண்டுதோறும் புத்தக தினவிழாவை நடத்தி வருகிறது," என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.