Pages

Thursday, April 25, 2013

மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்க்க வேண்டும்

"மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்," என காமராஜ் பல்கலை., பதிவாளர் கே.பிச்சுமணி கூறினார். சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆண்டு விழாவில் அவர் பேசியதாவது:
உலகமயமாக்கல் சூழ்நிலையில் மாணவர்கள் உயர்கல்வி பெறுவது மிகவும் அவசியம். இன்றைய நவீன அறிவியல் வசதியால், லேப் டாப்பில் ஆராய்ந்து நமக்கு தேவையான அறிவை பெற முடிகிறது. இன்றைய சூழ்நிலையில் மாணவர்கள் சராசரியாக 5 மணிநேரம் மொபைல் போன், இன்டர்நெட், டிவி.,யில் நேரத்தை செலவிடுகின்றனர். பல்வேறு பொது விசயங்கள் தெரிந்து கொள்கின்றனர்.

21ம் நூற்றாண்டில் தொழில்நுட்ப புரட்சி ஏற்படும். இந்திய மாணவர்கள் விண்வெளி ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்த விளங்குகின்றனர். மாணவர்கள் முன்னேறுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உருவாகி உள்ளது.

தனித்திறனை வளர்க்க வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கற்பது வகுப்பறையோடு முடிந்து விடுவதில்லை. கடினமாக உழைத்தால் நிச்சயம் முன்னேறலாம், என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.