மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இன்று (10ம் தேதி) மாநில அளவிலான கோரிக்கை மாநாடு நடக்கிறது.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஒட்டு மொத்த பணிக் கால அடிப்படையில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நான்கு கட்ட போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக வட்டார அளவில் ஆர்ப்பாட்டம், 2வது கட்டமாக ஆசிரியர் சந்திப்பு இயக்கம், 3ம் கட்டமாக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தற்போது 4வது கட்டமாக மாநில அளவிலான கோரிக்கை மாநாடு சென்னையில் இன்று (10ம் தேதி) நடக்கிறது. இதில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, சி.ஐ.டியு, மூட்டா உட்பட பல்வேறு சங்கங்கள் பங்கேற்கிறது.
இதில் நெல்லை மாவட்டத்தின் சார்பில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசி‘ரியர் கூட்டணி மாநில செயலாளர்கள் முருகேசன், மணிமேகலை, மாவட்ட தலைவர் ராஜ்குமார், செயலாளர் சுடலைமணி, பொருளாளர் ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்,.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.