Pages

Monday, April 8, 2013

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பாளையில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

இலங்கையில் தனிஈழம் அமைக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக் சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஈழ தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி, அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு, அனைத்து ஆசிரியர் சங்கம் ஆகியவை சார்பில் பாளை மார்க்கெட் திடலில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இதற்கு அனைத்து ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் கிப்சன், அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு உயர்நிலை குழு உறுப்பினர் செல்வகுமார், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நகர செயலாளர் ஜார்ஜ் இனிகோ ஆகியோர் தலைமை தாங்கினர். அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் அரிகரன், மாநில தலைவர் கார்த்திக்கேயன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் வேல்முருகன், செயலாளர் கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணை செயலாளர் சத்தியமூர்த்தி வரவேற்று பேசினார். தமிழர் நல உரிமை இயக்க தலைவர் அறிவரசன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். உண்ணாவிரதத்தில் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இன்று மாலை உண்ணாவிரதத்தை பேராசிரியர் தொ.பரமசிவன் முடித்து வைக்கிறார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.