Pages

Tuesday, April 23, 2013

புதிதாக பாலிடெக்னிக் துவங்க அரசுக்கு எண்ணமில்லை

"பாலிடெக்னிக் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், புதிய பாலிடெக்னிக் கல்லூரிகள் திறக்க, அரசு உத்தேசிக்கவில்லை" என உயர்கல்வித் துறை அமைச்சர், பழனியப்பன் கூறினார்.
சட்டசபை கேள்வி நேரத்தின் போது, நடந்த விவாதம்: அ.தி.மு.க.,- சண்முகவேல்: திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தில், அரசு பாலிடெக்னிக் துவங்கப்படுமா?

உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன்: இந்தியாவில், தமிழகத்தில் தான் மிக அதிகபட்சமாக, 498 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகள் அடக்கம்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டிலும், சுயநிதி கல்லூரிகளில், 50 சதவீத இடங்கள், இட ஒதுக்கீடு அடிப்படையிலும் நிரப்பப்படுகின்றன. இடஒதுக்கீட்டில் நிரப்பப்படும் இடங்களிலேயே, மாணவர் சேர்க்கை முழுமையாக நடைபெறவில்லை.

பெரும் பகுதி இடங்கள் காலியாக உள்ளன. இதனால், புதிய பாலிக்டெக்னிக் கல்லூரிகள் துவங்கும் எண்ணம், அரசுக்கு இல்லை. காற்றாலை மின் உற்பத்திக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதற்கான, டிப்ளமோ கல்வி வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பல்கலைக்கழகங்களில், தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையம் மூலம், காற்றாலை மின் உற்பத்தி தொடர்பான கல்வி அளிக்கப்படுகிறது. இதை, இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு, விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.