Pages

Thursday, April 25, 2013

அரசுப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

ஊதிய முரண்பாடு பிரச்னையில் குழுவின் அறிக்கையை வெளியிடும் முன்பு கருத்து கேட்கக் கோரி அரசுப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய முரண்பாடுகளை களைவதற்கான குழுவின் அறிக்கையை
வெளியிடும் முன் அனைத்து சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும்.வருமான வரி உச்சவரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப் பணியாளர்கள் மாவட்ட தலைநகர்களில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் வீ.குணசேகரன் தலைமை வகித்தார்.மாவட்டச் செயலர் மூ.ராசாமணி வரவேற்றார். அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலர் கு.பாலசுப்ரமணியன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.மாநிலத் துணைப் பொதுச்செயலர் பெ.நல்லதம்பி, பொருளர் சி.பரமசிவம் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் ஜெயச்சந்திரராஜா, சரவணன், சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.வங்கி ஊழியர் சங்க மாவட்டத் துணைத்தலைவர் ரமணி உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.