Pages

Wednesday, April 3, 2013

தேர்வுத்துறை இணை இயக்குனர் பணியிடம் காலி

தேர்வுத்துறை இணை இயக்குனர் (மேல்நிலைக் கல்வி) பணியிடத்தை நிரப்பாமல், வழக்கம் போல், கூடுதல் பொறுப்பில், பணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தேர்வுத்துறை இணை இயக்குனர் ஆரோக்கியசாமி, கடந்த, 31ம் தேதி ஓய்வு பெற்றார். இந்த பணியிடத்திற்கு, உடனடியாக, இணை இயக்குனர் நியமிக்கப்படவில்லை. மாறாக, பணியாளர் தொகுதி இணை இயக்குனர் தங்கமாரியிடம், கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன. இதுபோன்ற நேரத்தில், மேல்நிலைக்கல்விக்கு என, இணை இயக்குனர் இருந்தால் தான், தேர்வுப் பணிகளை உடனுக்குடன் கவனித்து, உரிய நேரத்தில், தேர்வு முடிவுகளை வெளியிட முடியும்.

பத்தாம் வகுப்பு தேர்வுப்பணியில் உள்ள இணை இயக்குனரிடம், மேலும் ஒரு பொறுப்பை கூடுதலாக ஒப்படைப்பது, அவருக்கு பணிப்பளுவை ஏற்படுத்தும் என்றும், பிளஸ் 2 பணிகளில் தொய்வு ஏற்பட்டுவிடும் என்றும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.