"தேர்வு எழுதும் அரசு பள்ளி, அரசு மானியம் பெறும் பள்ளி, சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் படிக்கும் அனைத்து மாணவர்களையும், அரசு பள்ளியிலோ, அரசு கல்லூரிகளிலோ உள்ள தேர்வு மையங்களில் தேர்வு நடத்தி, தேர்வு
எழுதுவதில் நடக்கும் தில்லுமுல்லுகளை நீக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என செயற்குழுக் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின், மாநில செயற்குழுக் கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாநிலத் தலைவர் மணி தலைமை வகித்தார். பொருளாளர் அலெக்சாண்டர் வரவேற்றார். பொதுச் செயலாளர் முத்துசாமி, கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில், சுயநிதி கல்வி நிறுவனங்கள் சிறு முதலீடு செய்து, பெற்றோர்களிடம் பெரும் கொள்ளை அடிக்கின்றனர். அரசு பொதுத்தேர்வுகளை, அந்நிறுவனங்களில் நடத்த அனுமதி பெற்று, மாணவர்கள் காப்பி அடிக்கவும், எழுதிப்போட்டு பார்த்து எழுதவும் அனுமதிக்கின்றனர்.
தேர்வு மேற்பார்வைக்கு செல்வோரை சரி செய்தும், ஏமாற்றியும் தேர்வு எழுதவைத்து, நல்ல மதிப்பெண் பெற வைக்கின்றனர். பறக்கும் படையை, பல இடங்களில் உள்ளே விடாமல் மிரட்டுகின்றனர். அரசு பள்ளியில், இது போன்ற தவறுகள் நடக்க முடியவில்லை.
படித்து தேர்வு எழுதும் அரசு பள்ளி, அரசு மானியம் பெறும் பள்ளி, சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் படிக்கும் அனைத்து மாணவர்களையும், அரசு பள்ளியிலோ, அரசு கல்லூரிகளிலோ உள்ள தேர்வு மையங்களில் தேர்வு நடத்தி, படித்த மாணவர்கள் அனைவரும் நல்லகுறியீடுகள் பெறவும், தேர்வு எழுதுவதில் நடக்கும் தில்லுமுல்லுகளை நீக்கவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு பள்ளிகளை முன்னேற்றுவதில், தனி அக்கறை காட்டும் தமிழக முதல்வர், சுயநிதிப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும்போதும், மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையை நிர்ணயம் செய்ய வேண்டும். அதே பள்ளியில், எஸ்.எஸ்.எல்.ஸி., படிக்கும் மாணவர்களை, ப்ளஸ் 1ல் சேர்க்க உத்தரவிட வேண்டும்.
மத்திய அரசு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., தேர்வுகளை நடத்துவது போல், (இந்தியன் எஜூகேசன் சர்வீஸ்) ஐ.இ.எஸ்., தேர்வு நடத்துவதுடன், அவர்களை கல்வித்துறையில், மாநில, மத்திய அரசுகளில் கல்வி இயக்குனர்களாக நியமனம் செய்ய வேண்டும்.
தமிழக அரசு அறிவிப்பின்படி, பள்ளிக் குழந்தைகளுக்கு, ஆண்டுக்கு நான்கு சீருடை வழங்க வேண்டும். ஆனால், தற்போது சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அனைத்து மாணவ, மாணவியருக்கும் சீருடை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது உள்பட பலர் பங்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.