Pages

Tuesday, April 23, 2013

பகுதிநேர ஆசிரியர்களை சோதிக்கும் மே மாதம்: அரசு கருணை காட்டுமா?

தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கான சம்பளம் வழங்க வேண்டும் என்று, பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மூலம் மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில், பகுதி நேர ஆசிரியர்களாக உடற்கல்வி, தையல், ஓவியம் மற்றும் கணினி ஆசிரியர்கள் என, 15 ஆயிரம் பேரை அரசு நியமித்தது. இவர்கள், மாதத்தில் 12 அரை நாட்கள் பணியாற்றுகின்றனர்.
பகுதி நேரமாக இருந்தாலும் அரசு வேலை என்பதால், பணிநிரந்தரம் செய்ய வாய்ப்பு ஏற்படும் என்ற எண்ணத்தில், பல ஆயிரம் ரூபாய் வரை சம்பளத்தில் பணியாற்றிய முந்தைய பணிகளை உதறித் தள்ளிவிட்டு, இப்பணியில் சேர்ந்தனர். பெரும்பாலும், 40 வயதை கடந்தவர்கள்.

இவர்களுக்கு, கோடை விடுமுறையான மே மாதத்தில் சம்பளம் வழங்கப்படுதில்லை. "எங்களுக்கும் குடும்பம், குழந்தைகள் உண்டு. அரசு வேலை என்பதால் இங்கு வந்து சேர்ந்தோம். மே மாதம் மட்டும் சம்பளம் இல்லை. அந்த மாதத்தில் நாங்கள் எங்கே போய் வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றுவது?

மே மாதம் பணிகள் ஒதுக்கினாலும் அதை செய்ய தயாராக உள்ளோம் அல்லது மே மாதத்தில் சம்பளம் வழங்கி, அதை ஈடுகட்டும் வகையில் வரும் மாதங்களில் வேலை நாட்களை அதிகரித்து கொள்ளலாம்" என பாதிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இதை கருத்தை தமிழாசிரியர் கழக மதுரை செயலாளர் ஜெயக்கொடி, சட்ட செயலாளர் வெங்கடேசன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் தென்னவன் வலியுறுத்தியுள்ளனர்.

பட்டதாரி ஆசிரியர் சங்க மதுரை செயலாளர் முருகன், "பகுதிநேர ஆசிரியர்கள் பெரும்பாலும் முழு நேரமாகவே பணியாற்றுகின்றனர். கருணை அடிப்படையில் மே மாத சம்பளம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

1 comment:

  1. தமிழக அரசு அரசாணை பிறப்பித்து ( அரசாணை (நிலை) எண் 177 பள்ளிகளிவி துறை (சி2) துறை நாள் 11.11.2011) அனைவருக்கும் கல்வி இயக்கம் வாயிலாக 100 மாணவர்களுக்கு அதிகமாக உள்ள அரசு பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு வரைவுள்ள மாணவர்களுக்கு உடற்கல்வி, கணினி, ஓவியம், இசை, தையல், தோட்டகலை, கட்டடக்கலை, ஆங்கில புலமை உள்ளிட்ட பாடபிரிவிகளில் மாணவர்களின் கல்வியை ஊக்கு விக்கும் வகையில் நியமித்ததால் வாய்ப்பினை பெற்று பணிபுரியும் தமிழகம் முழுவதும் உள்ள 16549 பகுதி நேர ஆசிரியர்களால் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருவதையும் , மாணவர்களின் எழுச்சியையும் உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் TNKALVII உதவி மனபான்மையுடன் எங்கள் அனைவருக்கும் அரசின் கருணை கிடைக்கும் வகையில் எங்களுக்கான அனைத்து இடர்பாடுகளையும் களைந்திட வேண்டுகிறோம். சம்பளம் மாதம் முதல் தேதியில் கிடைத்திடவும், எங்களின் வங்கி கணக்கில் கிடைத்திடவும், அரசாணையில் உள்ளபடி வாரம் 3 அரை நாட்கள் - மாதம் 12 அரை நாட்கள் வருகை புரிந்து பனி புரிய வேண்டும் என்ற விதிமுறைப்படி பணிபுரிவதில் பள்ளி நடைபெறாத விடுமுறை நாட்களுக்கு எங்களின் சம்பளத்தை தினக்கூலி அடிப்படையில் பிடித்தம் செய்வதை தவிர்க்கவும், ஓராண்டாகியும் மாவட்டம், ஒன்றியம் அளவில் தினமும் 100 கிலோமீட்டர் வரை பயணம் செய்து பேருந்து கட்டணமாக சம்பளத்தில் ஒரு பகுதி பணம் செலவிட்டு பணிபுரியும் கழ்டமான சூழ்நிலைகளையும் பெண் ஆசிரியர்கள் அவரவர் குடும்பங்களை கவனித்திடும் வகையிலும் குறைந்தபட்சம் அருகில் உள்ள காலி பணியிடம் உள்ள பள்ளிகளுக்கு அல்லது மனமொத்த மாறுதல் வழங்கிடவும், தற்போது மாநில அளவில் புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருப்பதில் முதலில் அரசாணைப்படி ஒருவர் அதிக பட்சமாக 4 பள்ளிகளில் பணிபுரியலாம் என்று உள்ளதில் ஓராண்டாக 5000 தொகுப்பூதியம் பெற்று பணிபுரியும் எங்களுக்கு பொருளாதார சிக்கல் இல்லாமல் குடும்பங்களை கவனிதிடும் வகையில் குறைந்த பட்சமாக இன்னொரு பள்ளியில் பணிபுரியும் வாய்ப்பாவது கிடைத்திடும் வகையில் TNKALVII தலையங்க செய்தியாக வெளியிட்டால் 16549 பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வில் ஒளிபெறும் என்று வேண்டுகிறோம்.

    ஒரு பகுதி நேர ஆசிரியருக்கு மாதம் தொகுப்பூதியம் 5000 என்று அரசாணையில் உள்ளபடி வழங்காமல் பள்ளி நடைபெறும் நாட்களுக்கு மட்டுமே ஊதியம் தரமுடியும் என்று வாய் மொழி உத்தரவாக கல்வி அதிகாரிகள் சொல்வது ரொம்பவும் வேதனையாக உள்ளது . இந்த ஏப்ரல் மாதத்திற்கு நடுநிலை பள்ளிகளை தவிர மேல் நிலை மற்றும் உயநிலை பள்ளிகளுக்கு 19.4.2013 முதல் பள்ளிகள் அனைத்திற்கும் முழு ஆண்டு விடுமுறை விடப்பட்டு விட்டதால் வாரம் 3 அரை நாட்கள்- மாதம் 12 அரை நாட்கள் என்ற விதிமுறையின்படி 5000 தொகுப்பூதியம் முழுவதும் வழங்கப்படாமல் பள்ளி நடைபெறாத நாட்களுக்கு தினக்கூலி அடிப்படையில் பிடித்தம் செய்து தரப்படும் என்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம் வாய் மொழியாக தகவல் சொல்லப்பட்டு இருப்பதை முதல்வர் அவர்களின் பார்வைக்கு நமது TNKALVII செய்தியாக கொண்டு சென்று ஒரு விடிவை செய்தால் கோடி நன்றி, வருகின்ற மே 10ந்தேதி நடைபெற இருக்கும் கல்வி மானிய கோரிக்கையில் எங்களது கோரிக்கைகளான முழுநேர பணி, காலமுறை ஊதியம், வங்கி கணக்கு மூலம் ஊதிய பட்டுவாடா, பணி பதிவேடு தொடங்குவது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை TNKALVII முதன்மை செய்தியாக வெளியிட்டு முதல்வர் அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்றால் இந்த 16549 பகுதி நேர ஆசிரியர்களும் காலம் காலாமாய் நன்றி சொல்வோம், எங்களை பற்றி சட்ட சபையில் பேச ஆளில்லை. நாங்களும் பல வழிகளை தேர்வு செய்தும் வெற்றி கிட்டவில்லை, புதிய திருப்பமாக தினமணியை நாடுகிறோம் ,பள்ளிகள் முதல் முதன்மை கல்வி அலுவலகங்கள்வரை எங்களை பயன்படுத்தி வேலைகளை மட்டுமே வாங்கிக்கொள்கின்றனர், பகுதி நேர ஆசிரியர்களால் பள்ளிகள் சிரமமின்றி இயங்குகின்றன, பள்ளியின் வேலைகள் கூட தாமதமின்றி நடைபெறுகின்றன என்ற உண்மைகளை அரசுக்கு தெரிவிப்பதில்லை, பரிந்துரைக்க முயற்சிக்கவும் இல்லை, வேலை செய்தும் ஊதியம் பெற போராட வேண்டியிருக்குறது, ஊதியம் பெறுவது சம்மந்தமான அனைத்து வேலைகளையும் அலைந்தும், பண செலவும் செய்து பெற நேரிடுவது வெளியில் சொல்ல முடியாத வேதனையும் வேதனைஇ இதுபோன்ற சமயங்களில் உயிருக்கு கூட உத்தரவாதமில்லை, ஆதலால் இந்த 16549 பகுதி நேர ஆசிரியர்களை காப்பாற்றவும் ,இப்படிக்கு செந்தில்குமார், செல் - 9487257203 கணினி ஆசிரியர், அரசு உயர்நிலை பள்ளி- புடையூர்.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.