Pages

Tuesday, April 30, 2013

அந்நிய முதலீட்டால் இந்திய கலாச்சாரம், பண்பாடு, தொழிலுக்கு ஏற்ற கல்வி அமையாது

அழகப்பா அரசு கலை கல்லூரியில், உயர் கல்வியில் அந்நிய முதலீடு, உள்நாட்டு தனியார் முதலீடு, அரசு கல்லூரிகளின் இன்றைய நிலைப்பாடு குறித்த மாநில கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கில் ஆசிரியர் சங்கச் செயலாளர் பேசியதாவது: தமிழகத்தில் 62 அரசு கல்லூரிகள், 643 தனியார் கல்லூரிகள், 35 பல்கலை உறுப்புக் கல்லூரிகள் உள்ளன. சட்டசபையில் அரசு கல்லூரி என அறிவித்து விட்டு, பல்கலை உறுப்பு கல்லூரியாக தொடங்கப்படுகிறது.

இந்த உறுப்பு கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை கட்டணம் அதிகமாக வாங்கப்படுகிறது. 1990க்கு பிறகு, உயர்கல்வியை தனியாரிடம் தாரை வார்க்கும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஐந்து ஆண்டுகளில், அந்நிய நாட்டு பல்கலை இந்தியாவில் ஊடுருவி உள்ளது, இந்திய பல்கலை கல்லூரிகளின் தரம் குறைய ஆரம்பித்துள்ளது.

உயர்கல்வி கற்றோர் எண்ணிக்கை 19 சதவீதம் என்று அரசு கூறுகிறது. ஆனால், 12 சதவீதம் மட்டுமே. இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தோனேஷியா, ரஷ்யா போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள், கல்வித்துறையில் நுழைந்துள்ளன.

இதனால், இந்திய கலாச்சாரம், பண்பாடு, தொழிலுக்கு ஏற்ற கல்வி அமையாது. மாநில மொழிகளின் கற்பிக்கும் நிலை குறைந்து விடும். ஏழை மாணவர்கள், உயர் கல்வியை பெற முடியாது. எனவே, கல்வித்துறையில் அந்நிய முதலீட்டை நிறுத்த வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.