Pages

Saturday, April 27, 2013

மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக புத்தக வாசிப்பு தினக் கொண்டாட்டங்கள்

DSCF2051.JPGஏப்ரல் 23 அன்று மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்கப்படுத்தும் வகையில் உலகம் முழுதும் “உலக புத்தக வாசிப்பு தினம்” கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி நூலகமும் சிறுமுகை கிளை நூலகமும் இணைந்து “உலக புத்தக வாசிப்பு தினம்”  கொண்டாடங்களை ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்வில்  பல்வேறு வகையான சிறுவர் புத்தகங்கள் வாசிப்புக்கென மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இவ்விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை பத்திரம்மாள் அனைவரையும் வரவேற்று வாசிப்பின் அவசியத்தை கூறினார். கணித ஆசிரியர் திருமுருகன் அவர்கள் மாணவர்களுக்கேற்ற வாசிப்பு முறைகளின் நுட்பங்கள் பற்றி விளக்கமாக கூறினார். ஆங்கில ஆசிரியை முனியம்மாள் அவர்கள் வாசிப்பு முறை இல்லாததால் ஏற்படும் இடர்பாடுகளை சுட்டிக் காட்டினார். ஆசிரியர் ரவிக்குமார் அவர்கள் வாசிப்பால் உயர்ந்த உலகத் தலைவர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். ஆசிரியை அமுதா அவர்கள் கவிதை வாசிக்கும் முறையையும்,  ஆசிரியை பிரேமாள் அவர்கள் உரைநடை வாசிக்கும் முறையையும், ஆசிரியை அங்கையற்கண்ணி அவர்கள் கதைகள் வாசிக்கும் முறையையும் அழகாக எடுத்துக் கூறினர்.

இதனை தொடர்ந்து சரியாக காலை 11:00 மணி அளவில் அனைத்து மாணவ – மாணவியர்க்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள் ஆழ்ந்து அமைதியாக படித்தனர். பின்னர் “படித்ததில் பிடித்தது” என்ற தலைப்பில்  மாணவர்கள் முன்வந்து   தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டது பாராட்டத்தக்க வகையில் இருந்தது.

இறுதியாக மாணவர்கள் அனைவரும் இவ்வாய்ப்புக்கு நன்றி கூறி  வாசிப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.