Pages

Thursday, April 25, 2013

சிந்திப்பதற்கு மட்டும் இந்தியாவில் வரி இல்லை: உயர்நீதிமன்ற நீதிபதி

 "சிந்திப்பதற்கு மட்டும் இந்தியாவில், வரி விதிக்கப்படுவதில்லை; இந்தியர்கள் தராளமாக சிந்திக்கலாம்," என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் பேசினார்.
மறைமுக வரி வல்லுநர்கள் கூட்டமைப்பின், நான்காவது ஆண்டு விழா, நேற்று முன்தினம், சென்னையில் நடந்தது. இதில், ராம சுப்ரமணியன் பேசியதாவது:

"இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில், வரி விதிப்பு பற்றிய துறையில், படித்தவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புக்கள் உள்ளன. வரியை பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்றால், கண்ணில் காணும் அனைத்தும் வரியுடன் காணப்படுகின்றன.

சம்பளம் வாங்குவோர் வரி கட்டும் நேர்மையை விட, வணிகம், தொழில் செய்வோரின் நேர்மை மிகவும் உயர்ந்தது. ஏனெனில், ஏமாற்ற வாய்ப்பிருந்தும், ஏமாற்றாதவர் தான், சிறந்த வாய்மையானவர்.

இந்தியாவில் தற்போது, சிந்திப்பதற்கு மட்டும் தான் வரி இல்லை. எனவே, இந்திய மக்கள் தராளமாக சிந்திக்கலாம். அனைவரும் வரியை, மறைக்காமலும், காலதாமதமும் இன்றி செலுத்த வேண்டும்." இவ்வாறு, நீதிபதி பேசினார்.

நிகழ்ச்சியில், சென்னை பல்கலை துணைவேந்தர் தாண்டவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.