Pages

Friday, April 26, 2013

ஆங்கில வாசிப்பில் எழுச்சி...

ஆங்கிலத்தில் உள்ள எளிய வார்த்தைகளைத் தமிழக ஊரக மாணவர்களில் 57.1 சதவிகிதத்தினரால் நன்றாக வாசிக்க முடிகிறது. இது, இந்திய அளவில் 48.9 சதவிகிதம்தான் என்பதால், அடிப்படை ஆங்கிலத்தை அறிந்துவைத்து இருப்பதில் தமிழகச் சுட்டிகள் முன்னேற்ற நிலையில் உள்ளனர்.
வகுப்பு ஆசிரியர்-மாணவர்கள் விகித விதிகளைக் கடைப்பிடிப்பதில் ஏற்றம் காணப்படுகிறது. கடந்த 2010-ல் 47 சதவிகிதப் பள்ளிகளில் இந்த விதிகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டன. இப்போது, இது 49.3 சதவிகிதமாக உயர்ந்து உள்ளது.

81.7 சதவிகிதப் பள்ளிகளில் ஆசிரியர்- வகுப்பறை விகிதம் விதிமுறைக்கு உட்பட்டு உள்ளது.

அசர் ஆய்வுக்காக மொத்தம் 630 பள்ளிகள் பார்வையிடப்பட்டன. அவற்றில் 80.8 சதவிகிதப் பள்ளிகளில் குடிநீர் வசதி உள்ளது. 12 சதவிகிதப் பள்ளிகளில் குடிநீர் வசதிகள் முற்றிலும் இல்லை.

கழிவறை வசதி இல்லாத பள்ளிகளின் விகிதம், 2011-ல் 9.6 சதவிகிதமாக இருந்தது. இது 5.2 சதவிகிதமாகக் குறைந்து இருக்கிறது. மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் உள்ள கழிவறைகள் உள்ள பள்ளிகளின் விகிதம், கடந்த இரண்டு ஆண்டுகளில் 44.6 சதவிகிதத்தில் இருந்து 68.9 சதவிகிதமாக உயர்ந்து உள்ளது.

66.1% பள்ளிகளில் முழுமையான சுற்றுச் சுவர் உள்ளது.

தமிழகத்தில் 99.8 சதவிகிதப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் முழுமையாகச் செயல்பசெயல்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.