Pages

Thursday, April 11, 2013

இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு ஈரோடில் நடைபெற்றது.

பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, ஈரோட்டில் நடந்த இடைநிலை ஆசிரியர்கள் மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோட்டில், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநிலத்தலைவர் கயத்தாறு தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஜெயராணி, மாநில தணிக்கையாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மாணிக்கம் வரவேற்றார். வரும் மே, 10ம் தேதி பள்ளி மானிய கோரிக்கைக்கு முன், தமிழகத்தில் அரசு, உதவி பெறும், நகராட்சி, மாநகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், 2,500 பேரை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தி ஆணையிட வேண்டும்.
முதல்வரின் தேர்தல் வாக்குறுதிப்படி, தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஒய்வூதிய திட்டத்தை தொடர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்து பழைய முறையில் ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும் எனப்பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொதுச்செயலாளர் இசக்கியப்பன் அறிக்கை சமர்ப்பித்தார். மாநில அமைப்பு செயலாளர் அருணகிரியார் நன்றி கூறினார்.

1 comment:

  1. please take necessary steps to get all sgs promotion in to bt

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.