தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 9 முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 1,823 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்காக மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பத்தைப் பெறுவதற்கான கடைசி தேதி மே 18 ஆகும்.
பூர்த்தி செய்யப்பட்ட் விண்ணப்பங்களை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ சேர்க்கைக் குழுவுக்கு மே 20-க்குள் அனுப்ப வேண்டும்.
கடந்த ஆண்டு மே 15-ஆம் தேதிதான் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.
இந்த ஆண்டு பி.இ. கலந்தாய்வு முன்கூட்டியே தொடங்குவதால் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வும் முன்கூட்டியே நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.