Pages

Wednesday, April 17, 2013

9 ம் வகுப்பு தேர்வில் 10ம் வகுப்பு வினாக்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு, ஆங்கிலம் இரண்டாள் தாள் வினாத்தாளில், 10 ம் வகுப்பு பாடத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டன.
ஒன்பதாம் வகுப்பு முழு ஆண்டு தேர்விற்கு, மாவட்ட அளவில், பொது கேள்வித்தாள் தயாரிக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில், நேற்று, ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நடந்தது.

எண் 1 முதல் 7 வரை வினாக்கள், 10ம் வகுப்பு பாடத்தில் இருந்து கேட்கப்பட்டன; இவற்றிக்கு 35 மதிப்பெண். மாணவர்கள் விடையளிக்க முடியாமல் குழப்பம் அடைந்தனர்.

ஆங்கில ஆசிரியர் ஒருவர் கூறுகையில்,"கேள்வித்தாள் தயாரித்த ஆசிரியர்கள், 10ம் வகுப்பு கேள்விகளை எடுத்துள்ளனர். ஒன்பதாம் வகுப்பு, துணைப் பாடத்தில் வினாக்கள் எடுப்பதற்கு பதிலாக, 10 ம் வகுப்பு துணைப்பாடத்தில் இருந்து, வினாக்கள் வந்துள்ளன. பொது அறிவு வினாவும், 10 ம் வகுப்பில் இருந்து கேட்கப்பட்டு உள்ளது. "எந்த வகுப்பிற்கு கேள்வி தயாரிக்கிறோம்" என, தெரியாமல் வினாத்தாள் தயாரித்து உள்ளனர்" என்றார்.

முதன்மைக் கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ் கூறுகையில், "குளறுபடியான வினாத்தாளை, எப்படி எடுத்தனர் என, விசாரிக்கப்படும். மாணவர்கள் அச்சப்பட தேவை இல்லை" என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.