Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, April 4, 2013

    வரி ஏய்ப்பில் 612 இந்திய நிறுவனங்கள்...சர்வதேச ஊடக புலனாய்வில் அம்பலம்!

    இந்தியா உள்பட உலகம் முழுவதும் 170 க்கும் அதிகமான நாடுகளில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், தனி நபர்கள் செய்த வரி ஏய்ப்பு விவரங்களை சர்வதேச அளவிலான புலனாய்வு பத்திரிகையாளர்களை கொண்ட அமைப்பு அம்பலப்படுத்தி உள்ளது.
    உலகம் முழுவதும் உள்ள 38 ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் புலனாய்வு பத்திரிகையாளர்கள் ஏற்படுத்திய, சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் கூட்டுச் சங்கம் ( International Consortium of Investigative Journalists- ICIJ -) அமெரிக்காவின் வாஷிங்ட்னை தளமாக கொண்டு செயல்படுகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த இந்தியன் எக்ஸ்பிரஸ், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட், பிரிட்டனின் த கார்டியன், பிபிசி, பிரான்ஸின் லே மோன்டே மற்றும் கனடா ஒலிபரப்புக் கழகம் உள்ளிட்ட ஏராளமான முன்னனி ஊடகங்களை சேர்ந்த பத்திரிகையாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    எல்லை தாண்டிய புலனாய்வில் ஈடுபடும் இந்த சங்கத்தில் இடம்பெற்றுள்ள பத்திரிகையாளர்களின் தீவிர மற்றும் கடுமையான உழைப்பினால், 2.5 மில்லியன் ரகசிய கோப்புகள் மற்றும் 206 க்கும் அதிகமான கணக்குகளின் ரகசிய கம்ப்யூட்டர் டேட்டாக்கள் என விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களை காட்டிலும் 160 மடங்கு அதிகமான ரகசிய கோப்புகளை இந்த பத்திரிகையாளர்கள் திரட்டி உள்ளனர்.


    வெளிநாடு முதலீடுகள், ரகசிய பண பரிமாற்றங்கள் என பல்வேறு தகிடுதத்தங்கள் மூலம் 170 க்கும் அதிகமான நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள், பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள், தீவிரவாத அமைப்புகள் செய்த வரி ஏய்ப்புகளை இந்த அமைப்பு கண்டறிந்துள்ளது.

    இந்த வரி ஏய்ப்பு பட்டியலில் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபரும், மாநிலங்களவை எம்.பி.யுமான விஜய் மல்லையா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை எம்.பி. விவேகானந்த் காதம் மற்றும் ரவிகாந்த் ரூயா, சமிர் மோடி, சேட்டன் பர்மன், அபய் குமார் ஓஷ்வால், ராகுல் மேமன், தேஜா ராஜூ, சவுரப் மிட்டல் மற்றும் வினோத் ஜோஷி உள்ளிட்ட பல்வேறு தொழிலபதிபர்கள் உள்பட 612 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    பிரிட்டனில் உள்ள விர்ஜின் தீவுகள், குக் தீவுகள், சமோ மற்றும் இதர சர்வதேச மறைவு பிரதேசங்களில் பல நூறு மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளதை மேற்கூறிய புலனாய்வு பத்திரிகையாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் ஃபெமா-FEMA- விதிகளை காலில்போட்டு நசுக்கிவிட்டு, இந்த முதலீடுகளை செய்துள்ளனர் மேற்கூறிய தொழிலதிபர்கள்.

    இதனை கண்டுபிடிக்க வேண்டிய மத்திய அரசின் புலனாய்வு ஏஜென்சிகளோ, ஆளும் கட்சியின் அரசியல் எதிரிகளின் கணக்கை தீர்க்கும் ஏவலாளியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறன.

    No comments: