தமிழகம் முழுவதும், இந்தாண்டு பிளஸ் 2 தேர்வை 8.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இவர்களது விடைத்தாள் திருத்தம் பணி, மார்ச் 28 முதல் 55 மையங்களில் துவங்கியது.
அறிவியல், கணிதம், கம்ப்யூட்டர் விடைத்தாள்களுக்கு, டம்மி நம்பர் வழங்கப்பட்டு, தனி மையங்களில் திருத்தப்பட்டன. இந்த மையங்களில் முன் கூட்டியே பணிகள் முடிந்தன. மொழித் தாள்களான தமிழ், ஆங்கிலம் விடைத்தாள்கள் இறுதியாக திருத்தப்பட்டன. தேர்வுத் துறை உத்தரவுபடி, ஏப்.,14 க்குள் நிறைவடைய வேண்டிய விடைத்தாள் திருத்தும் பணிகள், இன்றுடன் முடிகிறது.
இதன் பின், டேட்டா சென்டரில் பாட வாரியாக மதிப்பெண்கள் தொகுக்கப்பட்டு, பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
இதன் பின், டேட்டா சென்டரில் பாட வாரியாக மதிப்பெண்கள் தொகுக்கப்பட்டு, பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.