சென்னைப் பல்கலை தொலை நிலை கல்வியில் வழங்கப்படும், முதுகலை பட்ட படிப்பு தேர்வுக்கு, வரும், 29ம் தேதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னைப் பல்கலைக்கழகத்தில், தொலை நிலை கல்வியில் வழங்கப்படும், எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி., உள்ளிட்ட முதுகலை படிப்புகளுக்கு, ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடக்க உள்ளன. இத்தேர்வுகளுக்கு, வரும் 29ம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், அபராத கட்டணத்துடன், மே 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப படிவங்களை, www.ideunom.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஜூன் 8ம் தேதி முதல், முதுகலை பட்ட படிப்புகளுக்கான தேர்வுகள் துவங்குகின்றன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.