Pages

Friday, April 26, 2013

தொடக்கக்கல்வித் துறை இட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்து விண்ணப்பம் பெற தகவல் இன்று (26.04.2013) மாலைக்குள் வெளிவரும் - TNPTF-ன் மாநில பொதுச் செயலாளர் தகவல்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilnwNC0c_b75w3ovLODTmfOsnZ7mEhF2pB4UrKIlYze2rllBk9Y4Ks5xraPXNdfntp2RhKP8kAShc0pQiHsrpPtgjEFNzfBf3RvknNLzSKeX22Mgrt2bGNmDfA4fdELsttO88FjPgiFFCW/s1600/DEE+25.04+(1).gifதொடக்கக்கல்வித் துறைக்கான 2013-14ஆம் ஆண்டிற்கான இட மாறுதல் மற்றும் பதவியுயர்வு கலந்தாய்வு குறித்து இதுவரை எந்த தகவலும் வராததால் ஆசிரியர்கள் மத்தியில் இதுகுறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் திரு.முருக செல்வராஜன் தெரிவித்தது, “பள்ளி வேலை நாட்கள் முடிவதற்குள் கலந்தாய்வு குறித்து விவரங்கள்  அறிவித்தால் தான் ஆசிரியர்கள் விண்ணப்பங்களை அளிக்க ஏதுவாக இருக்கும்.
இதுவரை அறிவிப்பு ஏதும் வராததால், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் தொடக்கக்கல்வித் துறை இயக்குனருக்கு இதுகுறித்து வலியுறுத்தி கடிதம் அளித்ததோடு நேற்று மாலையும் இன்று காலையும் தொடக்கக்கல்வித் துறை இயக்குனர் திரு.இராமேஸ்வர முருகன் அவர்களிடம் தொலைப்பேசி வாயிலாக பேசுகையில், கல்வித்துறை அமைச்சர் மற்றும்  கல்வித்துறை முதன்மை செயலாளரிடம் ஆலோசித்து விட்டு இன்று (26.04.2013) மாலைக்குள் இது குறித்து உறுதியான தகவலை தருவதாக தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.