Pages

Sunday, April 21, 2013

பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த உயர் / மேல்நிலை பள்ளிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்தன, இன்று (21.04.2013) முதல் விடுமுறை

தமிழகத்தில் உள்ள உயர்/மேல்நிலை பள்ளிகளில் கடந்த 10 நாட்களாக ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற்று வந்தன. நேற்று 20ம் தேதியுடன் அனைத்து தேர்வுகளும் முடிவடைந்தன.
இதையடுத்து இன்று (21ம் தேதி) முதல் ஜூன் 2ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் தங்கி இருந்த மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். கல்வித் துறை உத்தரவுப்படி ஏப்ரல் 20ம் தேதி வரை பள்ளிகள் நடத்தப்பட வேண்டும் என்பதால் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளிட்ட பல தனியார் பள்ளிகளில் நேற்று வரை தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டு அதற்கேற்ப தேர்வுகள் நடத்தப்பட்டன.

பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து தொலை தூரம் செல்லும் பஸ்கள், ரயில்களில் கூட்டம் அலைமோதியது. தொடக்கப் பள்ளிகளுக்கு இனிதான் தேர்வு: தொடக்க கல்வித் துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு ஏப்ரல் 22ல்தான் ஆண்டு இறுதித் தேர்வு தொடங்க உள்ளது. இப்பள்ளிகளுக்கு வருடத்தில் 220 வேலை நாள் என்பதால் ஏப்ரல் 30ம் தேதிவரை செயல்படும். இவர்களுக்கு 33 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

கோடை வெயிலின் தாக்கத்தை உணர்ந்து மாணவ, மாணவிகள் உடல் நலன் கருதி விரைவில் தேர்வுகளை நடத்தி விடுமுறை வழங்க ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.இதனிடையே சிபிஎஸ்பி பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை விடப்பட்டு முடிவடைந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இப்பள்ளிகளில் முதல் பருவ தேர்வுகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கி மே 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து மே 11ம் தேதியில் இருந்து ஜூன் முதல் வாரம் வரை மீண்டும் கோடை விடுமுறை விடப்பட உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.