ஜனவரி
2013 முதல் 8 சதவீத அகவிலைப்படி உடனடியாக வழங்க கோரி அகில இந்திய இரயில்வே
சங்கம் சார்பில் அதன் பொது செயலாளர் திரு.சிவ கோபால் சர்மா மத்திய நிதி
அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அகவிலைப்படி உயர்வானது
வழக்கமாக பல வருடங்களாக மார்ச் 31ஆம் தேதிக்குள் அறிவிக்கப்பட்டுவிடும்
எனவும், இது காலங்காலமாக நடந்து வருகிறது என்றும், ஆனால் தற்பொழுது ஏப்ரல்
தொடங்கியும் இதுவரை அகவிலைப்படி அறிவிக்கப்படாதது துரதிருஷ்டமானது என தனது
அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
மேலும் இத்தாமதமானது ஓய்வூதியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை திகைப்படைய செய்துள்ளது. அரசு ஊழியர்கள் நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கின்றனர், குறிப்பாக 13 லட்சம் இரயில்வே ஊழியர்களின் பங்கு முக்கியமானது.
மேலும் இத்தாமதமானது ஓய்வூதியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை திகைப்படைய செய்துள்ளது. அரசு ஊழியர்கள் நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கின்றனர், குறிப்பாக 13 லட்சம் இரயில்வே ஊழியர்களின் பங்கு முக்கியமானது.
இக்காலதாமதத்திற்கு
அகில இந்திய இரயில்வே சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது எனவும், எனவே
அகவிலைப்படியை உடனடியாக அறிவிக்க வேண்டும் எனவும், இல்லையெனில் 13 லட்சம்
இரயில்வே ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஒன்று திரட்டி அடுத்த கட்ட நடவடிக்கை அரசுக்கு எதிராக எடுப்பதை தவிர்க்குமாறு AIRF கேட்டுகொள்கிறது என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில
இந்திய இரயில்வே சங்கம் மற்றும் ஏனைய மத்திய அரசு ஊழியர்கள் சங்கங்களின்
அதிருப்தியடுத்து விரைவில் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் என
எதிர்ப்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.