இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை நீக்கி ஊதிய விகிதத்தை PB-1ல் இருந்து PB-2 மாற்றி வழங்க வலியுறுத்தியும், உடனடியாக இடைகால அடிப்படையில் 01.06.2009-க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.86ஆல் பெருக்கி ஊதியம் வழங்க வலியுறுத்தியும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க மே 4ல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மதுரையில் நடத்த இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் முடிவு செய்துள்ளது. இது குறித்து இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலாளர் திரு. இராபர்ட் கூறுகையில் ஆறாவது ஊதியக் குழுவில் இடைநிலை
ஆசிரியர்களின் ஊதிய விகிதம் கடைநிலை ஊழியர்களின் ஊதியத்திற்கு இணையாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் 6வது ஊதிய குழுவிற்கு முன் மற்றும் பின் என இரு வேறுப்பட்ட ஊதியம் பெரும் அவலநிலை இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் கிடைத்துள்ளது எனவும், எனவே இது குறித்து தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றவும், உடனடியாக இடைகால அடிப்படையில் 1.6.2009க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.86 ஆல் பெருக்கி ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் வருகிற மே 4ல் மதுரையில் நடத்த முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் RTE சட்டப்படி தகுதியான ஆசிரியர்களை நியமிக்கவும், அவர்களுக்கு சட்டப்படி தகுதியான ஊதியம் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தகுதியின் அடிப்படையில் மட்டும் 10000 இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.