விழுப்புரம் அருகே 221 மாணவர்களின் 10ம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் விடைத்தாள்களைக் காணவில்லை.
10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், நடந்து முடிந்த ஆங்கிலம் முதல் தாள் தேர்வில், சத்தியமங்கலத்தில் ஒரு பள்ளியில் இருந்து திண்டிவனத்துக்கு அனுப்பப்பட்ட விடைத்தாள்களில், 221 விடைத்தாள்களை மட்டும் காணவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 25 மாணவர்கள், மேல்பாப்பாம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 176 பேர், தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 20 பேர் என மொத்தம் 221 பேர் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதினர்.
தேர்வு முடிந்ததும், சத்தியமங்கலம் போஸ்ட் ஆபிஸில் விடைத்தாள்கள் கொடுத்தனுப்பபப்பட்டு, அவைகள் திண்டிவனம் வந்து அங்கிருந்து ரயிலில் திருச்சிக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. சத்தியமங்கலம் போஸ்ட் ஆபிஸில் இருந்து தபால் ஊழியர் விடைத்தாளைக் எடுத்துக்கொண்டு செஞ்சியில் இருந்து தனியார் பேருந்து மூலமாக திண்டிவனம் கொண்டு வரும் வழியில் 221 விடைத்தாள்கள் காணாமல் போயுள்ளன. இதையடுத்து அவர் சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விடைத்தாள்கள் காணாமல் போனது குறித்து துணை ஆட்சியர் மீனா பிரியதர்ஷினி, வட்டாட்சியர் ஜெயக்குமார் ஆகியோரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடலூரில் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாள்கள் சேதமடைந்ததை அடுத்து இன்று மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது மாணவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.