Pages

Sunday, April 28, 2013

சென்னை மாநகராட்சி சார்பில் புதிதாக 10 மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், 20 மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி விரிவுபடுத்தப்படும் என்றும் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சி சார்பில் புதிதாக 10 மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், 20 மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி விரிவுபடுத்தப்படும் என்றும் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் சாதாரண மன்ற கூட்டம் மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில்  நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய மன்றக் கூட்டத்திற்கு மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினார். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் கேள்வி நேரம் தொடங்கியது.கேள்வி நேரத்தின்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:–

பி.சாந்தி(அ.தி.மு.க): சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுமா?

சைதை துரைசாமி: தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு வகுப்புகள் மாலை நேரங்களில், அதாவது பள்ளி முடிந்த பிறகு பயிற்றுவிக்க பரிசீலனை செய்யப்படும்.

இவ்வாறு விவாதம் தொடர்ந்து நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து மேயர் சைதை துரைசாமி மன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவோடு 133 தீர்மானங்களை நிறைவேற்றினார். அவற்றில் முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு:–

* சென்னையில் 30 மழலையர் பள்ளிகள் நல்லமுறையில் இயங்கி வருகின்றது. 2013–14–ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி வரும் கல்வியாண்டில் திருவொற்றியூர், அரும்பாக்கம், திரு.வி.க.நகர், எம்.ஜி.ஆர்.நகர், திருவல்லிக்கேணி உள்பட 10 இடங்களில் புதிதாக மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும்.

* 2013–2014–ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி, வரும் கல்வியாண்டில் கொளத்தூர், கோபாலபுரம், இந்திரா நகர், வியாசர்பாடி, சின்னாண்டி மடம், அமைந்தகரை உள்பட 20 மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி விரிவுபடுத்தப்படும்.

மேற்கொண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.