Pages

Tuesday, March 26, 2013

மேல்நிலைத் தேர்வு மைய மதிப்பீட்டு பணியை மேற்- கொள்ளாத அனைத்து SSA CEO / DIET முதல்வர்கள் / DIET விரிவுரையாளர்கள் / DEO / மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் SSLC கண்காணிப்பு பணி மேற்கொள்ள உத்தரவு.

நாளை (27.03.2012) தொடங்கவுள்ள SSLC பொதுத் தேர்வில் கண்காணிப்பு பணியில் ஈடுபட, மேல்நிலைத் தேர்வு மைய மதிப்பீட்டு பணியை மேற்கொள்ளாத அனைத்து SSA CEO / DIET முதல்வர்கள் / DIET விரிவுரையாளர்கள் / DEO / மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் ஆகியோருக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும், பெரும்பாலான மாவட்ட கல்வி அலுவலர்களும் மைய மதிப்பீட்டு பணியில் ஈடுபடுவதால் அவர்களை தவிர ஏனைய அலுவலர்கள் SSLC பொதுத் தேர்வு கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மற்றும் இவ்வாண்டு மேல்நிலைத் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் விழிப்புடன் கண்காணிக்க அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏதேனும் முறைகேடுகள் / ஒழுங்கீனச் செயல்கள் நடைபெற்றால் உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கையினை உடனுக்குடன் அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுப்பிவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.