Pages

Sunday, March 24, 2013

தொடக்க கல்வி துறையில் அலகு விட்டு அலகு மாறுதல் இந்த வருடம் நடக்குமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

இரண்டு வருடங்களுக்கு முன் நடத்தப்பட்ட அலகு விட்டு அலகு மாறுதல் இந்த வருடம் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்கள் பரவலாக எழுந்துள்ளது. குறிப்பாக பட்டதாரி ஆசிரியர்களை பொருத்தவரை அவர்கள் பள்ளிக்கல்விதுறைக்கு ஈர்க்கப்பட்ட நாள் முதலே முன்னுரிமை
வைக்கப்படுவதால் அடுத்த TET மூலம் அடுத்த பட்டதாரி நியமிக்கப்படும் முன் ஈர்க்கப்பட்டால் சற்று முன்னுரிமை கிடைக்கும் மேலும் முதுகலை ஆசிரியராக பதவியுயர்வு பெற வாய்ப்பு என்று கிட்டும் எதிர்பார்கின்றனர்.

இது குறித்து பேசிய ஒரு பட்டதாரி ஆசிரியர் " வட்டார வள மையங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரிய பயிற்றுனர்களுக்கு எப்படி முறையாக ஒவ்வொரு ஆண்டும் முன்னுரிமைப்படி பள்ளிக்கல்வித்துறைக்கு பணிமாறுதல் அளிக்கப்படுகிறதோ அதே போல் எங்களுக்கும் அளித்தால் அது பலருக்கு வாய்ப்பாக அமையும் " என்றார் .

எனவே தொடக்க கல்வி துறையில் அலகு விட்டு அலகு மாறுதல் இந்த வருடம் நடக்கும் பட்சத்தில் பல பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை செல்ல வாய்ப்பு ஏற்படும். மேலும் உயர்கல்வி பயின்று பணிபுரிந்து கொண்டு இருக்கும் பல இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வாய்ப்பு ஏற்படும் எனவும் தொடக்க கல்வி துறையில் பணிபுரிந்நது கொண்டு இருக்கும் பல இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

1 comment:

  1. I am awaiting for this for the past 2years.Because I completed B.Ed,working as SG tr., and waiting for Maths BT promotion,If P.U.M.School BT'S have a chance to go to DSE,it will really helpful to us and will get promtoin from SGT to midle BT.May the DSE consider this request?

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.