Pages

Sunday, March 24, 2013

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கல்வித்துறையினர் ஆலோசனை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடு குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
மாவட்ட கல்வி அலுவலர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். நஞ்சப்பா பள்ளி தலைமையாசிரியர் துரைசாமி முன்னிலை வகித்தார். தேர்வு பணியில் ஈடுபடும் முதன்மை கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் காலை 8.15 மணிக்குள், தேர்வு மையத்துக்கு சென்றுவிட வேண்டும். தேர்வு மையமான பள்ளி வளாகம், தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும்; தேர்வறைகள் மிக சுத்தமாக இருக்க வேண்டும்.

தேர்வறைகளின் மாதிரி விளக்கப்படம், பள்ளி வளாக முன்பகுதியில் எண்கள் குறிப்பிட்டு, மாணவர்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். குடிநீர் வசதி அவசியம் இருக்க வேண்டும். மாணவ, மாணவியர் பாதிப்படையும் வகையில், யாரும் செயல்படக் கூடாது, என, ஆலோசனை வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.