Pages

Saturday, March 23, 2013

ஜூன் மாதத்துக்குள் சுய விவரங்களை ஓய்வூதியர்கள் சமர்ப்பிக்க அறிவிப்பு

ஓய்வூதியர்கள் தங்களது முழு விவரங்களை வரும் ஜூன் மாதத்துக்குள் கருவூலத்தில் சமர்ப்பிக்காவிட்டால், ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஓய்வூதியம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்டக் கருவூல அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியர்கள் தங்களது 2013-14-ஆம் நிதி ஆண்டுக்கான நேர்காணலுக்காக வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் வரை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அவரவர் ஓய்வூதியம் வாங்கும் கருவூலங்களுக்கு நேரில் வர வேண்டும். நேர்காணலுக்கு வரும்போது, தனி தாளில் தங்களது பெயர், ஓ.கொ.எண். வங்கியின் பெயர், முகவரி, வருமானவரி கணக்கு(பான்கார்டு) எண், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் கார்டு எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு சம்மந்தப்பட்ட பிரிவு கணக்கரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.நேர்காணலுக்கு வர இயலாத ஓய்வூதியர்கள், ஆயுள் சான்றிதழ் படிவத்தை உரிய அதிகாரிகளிடம் பெற்று சம்மந்தப்பட்ட கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவம் கருவூல இணையதளத்தில் உள்ளது. இந்த நேர்காணலுக்கு வராத அல்லது ஆயுள் சான்று கொடுக்காதவர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும் எனச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.