நாமக்கல் பகுதியைச் சேர்ந்த பொம்மைக்குட்டுமேடு என்ற ஊரில் அரசுப் பள்ளியில் திங்களன்று நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வின் போது விடைகளை ஆசிரியர்கள் எழுதிக் காட்டியதாகத் தெரிய வந்ததை அடுத்து தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது.
கடந்த திங்கள் கிழமையன்று இயற்பியல் பாடத்துக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. அப்போது பொம்மைக்குட்டுமேடு பகுதியில் உள்ள காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் 2 ஆசிரியர்கள் விடைகளை காகிதத்தில் எழுதி ஜன்னல் வழியாக மாணவர்களுக்குக் காண்பித்ததாகக் கூறப்படுகிறது.
இதனை பார்த்த தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் தேர்வுத் துறைக்கு புகார் அளித்தனர். இதையடுத்து, அந்த பள்ளியின் தேர்வு மையத்தை ரத்து செய்த தேர்வுத் துறை, இனிமேல் வரக் கூடிய பிளஸ் 2 பொதுத் தேர்வுகளையும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளையும், செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடத்த உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.