மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆறாவது ஊதியக்குழு முரண்பாடுகளை களையும் மூன்றுநபர் குழு அறிக்கை பகிரங்கமாக வெளியிட வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். மத்திய அரசு ஓய்வூதிய நிதியை பங்குசந்தையில் முதலீடு செய்வதை திரும்ப பெற வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வை தமிழக அரசு கைவிட்டு வேலைவாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையில் நியமிக்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.