தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றங்களின் கலையாசிரியர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கான தொகுப்பூதியத்தினை உயர்த்திட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றங்களின் மூலம் 5 முதல் 16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு சென்னையில் 16 வகையான கலைகள், மாவட்டங்களில் 4 வகையான கலைகள் என மொத்தம் 20 வகையான கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இந்த சவகர் மன்றங்களில் கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லாமல் பணியாற்றியவர்களுக்கு ஊதிய உயர்வினை வழங்க கூடுதலாக 26 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை சவகர் மன்ற கலையாசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் 1500 ரூபாயிலிருந்து, 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் மாவட்டப்பகுதிகளில் உள்ள கலையாசிரியர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் 300 ரூபாயிலிருந்து, 1,500 ரூபாயாக ஐந்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
ஊரக மைய ஆசிரியர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கான ஊதியம் 150 ரூபாயிலிருந்து, 1000 ரூபாயாக ஆறு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 34 கலையாசிரியர்கள், 4 ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்டங்களில் 136 கலையாசிரியர்கள் 35 திட்ட அலுவலர்கள் என மொத்தம் 209 பேர் பயன்பெறுகிறார்கள்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.