Pages

Sunday, March 3, 2013

தமிழக தொடக்கப்பள்ளிகளின் இன்றைய நிலை...

தமிழக கிராமப்புறங்களில் எண்பது சதவீதம் ஈராசிரியர் பள்ளிகளே. ஆனால் வருடத்தில் கீழ்கண்ட சந்தர்ப்பங்களில் அப்பள்ளியில் ஐந்து வகுப்புகளூக்கும் ஓராசிரியரே கற்பிக்கவேண்டியுள்ளது.ஒரு ஆசிரியருக்கு தற்செயல் விடுப்பு 12 நாட்கள் வீதம் = 24 நாட்கள்
ஒரு ஆசிரியருக்கு வரையறுக்கப்பட்ட விடுப்பு 3 நாட்கள் = 6 நாட்கள்
தலைமையாசிரியர் கூட்டம் குறைந்த்பட்சம் = 8 நாட்கள்
பயிற்சி நாட்கள் குறைந்த்பட்சம் (தலைமையாசிரியருக்கு)= 20நாட்கள்
பயிற்சி நாட்கள் குறைந்த்பட்சம் (உதவியாசிரியருக்கு) = 10 நாட்கள்
மூன்று பருவத்திற்கும் பாடபுத்தகங்கள் எடுக்க = 4 நாட்கள்
மூன்று பருவத்திற்கும் நோட்டு புத்தகங்கள் எடுக்க = 3 நாட்கள்
மூன்று பருவத்திற்கும் சீருடை எடுக்க = 3 நாட்கள்
விலையில்லா செருப்பு கிரையான்ஸ் மற்றும் பை எடுக்க = 3 நாட்கள்
ஆக மொத்தம் பள்ளி வேலை நாட்கள் 210 ல் குறைந்த்பட்சம் 71 நாட்கள் இப்பள்ளிகள் ஓராசிரியராக செயல்படுகின்றது.
(இதில் ஆசிரியரின் மருத்துவ விடுப்பு, அவசர தபால்கள் அலுவலகத்திற்கு கொண்டுசெல்வது, புள்ளிவிவரங்கள் தயாரிப்பது, தேர்தல் பாணி, வாக்காளர் சேர்ககை, புகைப்படம் எடுத்தல் பஸ் பாஸ், மாணவர் கல்வி உதவித்தொகைக்கு அலைவது, கட்டுமானப்பணி மற்றும் இன்னும் சிலவற்றை சேர்க்கவில்லை)
இதில் மாணவன் எடுக்கும் விடுப்பு கற்பித்தல் நடத்தமுடியத தேர்வு நாட்கள் உள்ளது.
இதில் அதிகபட்ச கொடுமை என்னவென்றால் மேற்கண்ட ஈராசிரியர் பள்ளிகளில் சமூகத்தில் கடைக்கோடியில் உள்ள புறக்கணிப்பிற்கு ஆளான குழந்தைகளே படிக்கின்றன.
இன்றைய அரசு மாணவர்களின் தரமான கல்விக்காக அடிப்படைக்கட்டமைப்பிற்கும் பெருமளவு ஆசிரியர் நியமனம் என கடினமான நிதி நெருக்கடியிலும் பெருத்த செலவு செய்கிறது.
இன்றைய குழந்தைகளே நாளைய பாரதம் என்பதில் நம்பிக்கை கொண்டு விலையில்லா மடிகணினி விலையில்லா மிதிவண்டி என தாரளம் காட்டி கல்வித்துறைக்கு அற்புதமான் பொற்காலம் அமைத்துள்ளது. மேற்கண்ட புள்ளிவிவரம் இவ்வரசின் கவனத்திற்கு சென்றால் நிச்சயம் இந்நிலை மாறும்

3 comments:

  1. Don't upload this kind of information. HM's training has been cancelled and postponed to the month of May, due to this kind of propaganda. Same-wise, if you continue to upload this kind of information, it will again spoil our freedom like not allowing us to take our eligible leave like ML. So, it is a kind request that don't upload any piece of information which are against the welfare of the teachers.

    Balu,
    Tiruppur.

    ReplyDelete
    Replies
    1. ஈராசிரியர் பள்ளிகளையெல்லாம் மூவாசிரியர் பள்ளிகளாக்கலாம் என்பதையே மேற்கண்ட புள்ளி விவரம் காட்டுகிறது. இதுல ஆசிரியர்களுக்கெதிரா ஒன்னுமில்லயே..

      NS RAJ
      TENKASI

      Delete
  2. இது மட்டும் இல்லை தலைவா! பி.ஏ.பி.எட்.எம்.ஏ. இதற்கு அரை சம்பள விடுப்பு.படிக்க பள்ளி நேரத்தைப் பயன்படுத்துதல் என நிறைய இருக்கு.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.