Pages

Wednesday, March 20, 2013

சில பள்ளிகளால் பெற்றோர் குழப்பம் முப்பருவ பாடத்திட்டத்தில் ஆண்டு இறுதித்தேர்வு எப்படி?

தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டம் அமலில் உள்ள நிலையில் மாணவர்களின் கல்விச் சுமை மற்றும் நோட்டுப் புத்தக சுமைகளை குறைக்க முப்பருவ பாடத்திட்டம் நடப்பு கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்டு பாடங்களை மூன்று பருவங்களாகப் பிரித்து ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனியாக பாடபுத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை நடத்தப்பட்ட 2 பருவ தேர்வுகளிலும் அதற்குரிய பாடத்திட்டங்களே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.இந்த நிலையில் மூன்றாம் பருவத்திற்கான தேர்வு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. ஆண்டு இறுதித் தேர்வான இந்த தேர்வை நடத்தும் சில பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு முழு பாடத்திட்டங்களையும் கற்று வரவேண்டும், அதற்கேற்ப கேள்விகள் கேட்கப்படும் என வாய்மொழியாக அறிவித்துள்ளதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். சில பள்ளிகள் முழு ஆண்டுக்கான பாடத்திட்டங்களையும் தொகுத்து மாணவர்களுக்கு வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:அரசு அறிவித்தப்படி பள்ளிகளில் முப்பருவ பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள ஆண்டு இறுதித் தேர்வுகளை நடத்த வேண்டும். முதல் மற்றும் 2ம் பருவ பாடத் திட்டங்கள் முடிக்கப்பட்டு விட்டன. இனிமேல் அதிலிருந்து கேள்வி கேட்க கூடாது. அரசு உத்தரவை எல்லா பள்ளிகளும் கடுமையாக கடைபிடிக்க வேண்டும். இதை யாராவது மீறுவதாக புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.