Pages

Saturday, March 30, 2013

பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகத்தின் மாநில பொது குழுக் கூட்டம்

பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகத்தின் மாநில பொது குழுக் கூட்டம் வரும் 30.03.2013 சனிக் கிழமை அன்று தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் காலை 9.30 மணி அளவில் நடைபெற உள்ளது.
இக்கூட்டம் மாநில பொதுச் செயலாளர் திரு.அ.வ.அண்ணாமலை அவர்கள் தலைமையில் நடை பெற உள்ளது.

கூட்டப் பொருள் ;
1. நமது உயிர் மூச்சு கோரிக்கையான , உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 50% வழங்கப்பட வேண்டும் .

2. பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகத்தின் மாநில தேர்தல் தேதி முடிவு
செய்தல் .
இது போன்ற 10 க்கும் மேற்பட்ட தீர்மானங்களைப் பற்றி கலந்தாலோசிக்கப் பட உள்ளது.

இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு முழுதும் இருந்து அந்தந்த மாவட்ட பொதுக் குழு மற்றும் செயற் குழு உறுப்பினர்கள் திரளாக பங்கு பெற உள்ளார்கள், அதனால் தமிழகம் முழுதும் உள்ள பதவி உயர்வு பெற்ற பட்டதாரி , தமிழ் ஆசிரியர்கள் ,மற்றும் சிறப்பாசிரியர்கள் பெருமக்களும் , மேலும் பதவி உயர்வு பெறப் போகும் இடை நிலை , மற்றும் சிறப்பாசிரியர் பெருமக்கள் ஆகிய அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டுகிறோம் .
நன்றி.
இப்படிக்கு ,
மாவட்ட நிர்வாகம்
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகம்.
கிருஷ்ணகிரி மாவட்டம்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.